தினமணி கொண்டாட்டம்

"இனி எந்த வரலாற்று படமும் இல்லை'

DIN

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் "நடிகையர் திலகம்'. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையைத் தழுவி உருவான இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். "மகாநடி' என்ற பெயரில் தெலுங்கிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளது. சாவித்ரி போலவே நடித்திருப்பதாகப் பலரிடம் இருந்தும் கீர்த்தி சுரேஷுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து திருமலைக்கு வந்திருந்தார் கீர்த்தி சுரேஷ். சாமி தரிசனத்துக்குப் பிறகு பேசிய அவர், ""நீண்ட நாட்களாக இங்கு வரவேண்டும் என நினைத்தேன். இப்போதுதான் இங்கு வருவதற்கு நேரம் கிடைத்தது. படம் வெற்றியடைந்திருப்பதில் மகிழ்ச்சி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில் நான் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், நான் அப்படி எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அதுமட்டுமல்ல, வேறு யாருடைய வாழ்க்கை வரலாற்றிலும் நான் நடிக்கவில்லை. இப்போதைக்கு "நடிகையர் திலகம்' மட்டும்தான். படம் பற்றிக் கேள்விப்பட்ட கமல் சார், நேரில் அழைத்து என்னைப் பாராட்டினார்'' எனத் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

கடையின் பூட்டை உடைத்து ரூ. 45 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT