தினமணி கொண்டாட்டம்

சூப்பர் டீலக்ஸ் 

DIN


"ஆரண்ய காண்டம்'  படத்தின் மூலம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் தியாகராஜன் குமார ராஜா.

அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று தனித்துவம் பெற்றார். "ஆரண்ய காண்டம்'  படத்துக்குப் பின் தற்போது  "சூப்பர் டீலக்ஸ்'  என்ற படத்தை இயக்கி வருகிறார்.  இப்படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு  உருவாகியுள்ளது. இதில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அவரது கேரக்டர் பெயர் ஷில்பா. பஹத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி உள்பட  பலர் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து,  இறுதிக் கட்டப் பணிகளை முடித்து விட்டு, படத்தை  உலக பட விழாக்களில் திரையிட  திட்டமிட்டுள்ளனர்.  எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.  பி.சி.ஸ்ரீராம், பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஆகிய மூவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். தியாகராஜன் குமாரசாமி, மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே.சேகர் ஆகிய நான்கு பேரும் இணைந்து இந்தப் படத்துக்குத் திரைக்கதை எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவரின் புகைப்படங்களும் இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ளன. விரைவில் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT