தினமணி கொண்டாட்டம்

என் பெயர் விரைவில்..

DIN

ராஜேஷ், ரூபா மஞ்சரி, ஜெயா, குணா, நவ்யா, ப்ரீத்தி மணி உள்ளிட்ட புதுமுகங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் "என் பெயர் விரைவில்'. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் கோவை பி.டி.ராஜா. படம் குறித்து இயக்குநர் பேசும் போது...

""ஐ.டி.கம்பெனியில் பணிபுரியும் நண்பர்கள் வார விடுமுறையை கழிக்கச் சுற்றுலா செல்கிறார்கள். வனங்களில் பொழுது போக்கும் அவர்கள், திடீரென்று அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அங்கிருந்து வெளியேறத் தெரியாமல் திணறுகிறார்கள். ஆள், அரவமற்ற அந்தப் பகுதியை கடந்து வருவதற்குள் பொழுது சாய்ந்து இருட்டி விடுகிறது. வேறு வழியில்லாமல்  தங்கும் விடுதியைக் கண்டுபிடித்து அங்கேயே தங்குகிறார்கள். மர்மமான அந்த விடுதிக்குள் அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் இருப்பதை உணர்கிறார்கள். ஒன்றாக இருப்பவர்களை அந்தச் சக்தி பிரித்து, சூழ்ச்சி செய்கிறது. சூழ்ச்சியை வெல்ல முடியாமல் ஒரு கட்டத்தில் அனைவரும் தனித்து விடப்படுகிறார்கள். அதன் பின்னர் அந்த அமானுஷ்ய சக்தி ஒவ்வொருவராகக் கொலை செய்கிறது. அந்தச் சக்தி என்ன... அதன் பின்னணி என்ன....  அவர்கள் எதனால் இறந்தார்கள் என்பதைச் சொல்லுவதே படத்தின் திரைக்கதை. கேரளத்தில் உள்ள பாலக்காடு, ஒத்தப் பாலம், கன்னூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு காரைக்காலில் நடைபெற்று வருகிறது.  மே மாத வெளியீடாக படம் திரைக்கு வருகிறது'' என்றார் இயக்குநர். ஒளிப்பதிவு - சந்திரன் சாமி.

இசை - ஏ.எம்.ஹெச்.சுரேஷ்.பாடல்கள்- ராஜா, வெள்ளத்துரை.
தயாரிப்பு - வி.விஜயலட்சுமி, பி.டி.ராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

30 கோடி பார்வைகளை கடந்த வைரல் விடியோ...யார் இந்த ராகுல் காந்தி!

70வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய இபிஎஸ்... விஜய், அண்ணாமலை வாழ்த்து!

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்துள்ளது?

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை!

அன்னையர் நாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT