தினமணி கொண்டாட்டம்

13 வருடங்களுக்குப் பின் மீண்டும்...

DIN

செல்வராகவன்  இயக்கத்தில்  2006- ஆம் ஆண்டு வெளிவந்த படம் "புதுப்பேட்டை'. விமர்சன ரீதியாகப் பாராட்டுக்களைப் பெற்றது. 
இப்படத்தில் தனுஷ், சினேகா ஜோடியாக நடித்திருந்தனர். இப்படத்தைத் தொடர்ந்து 13 வருடங்கள் கழித்து இந்த ஜோடி புதிய படத்தில் இணைய உள்ளது. துரை செந்தில்குமார் இயக்கும் இந்தப் படத்தில் தனுஷ், சினேகா இணைய உள்ளனர். இதில் தந்தை, மகன் என இரு வேடங்களில் தனுஷ் நடிக்கவுள்ளார். தந்தை தனுஷுக்கு ஜோடியாகத்தான் சினேகா நடிப்பதாகத் தெரிகிறது. மகன் தனுஷுக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். ஏற்கெனவே துரை செந்தில்குமார் இயக்கிய "கொடி' படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் அண்ணன், தம்பி என இரு வேடத்தில் நடித்திருந்த தனுஷுக்கு த்ரிஷா, அனுபமா ஜோடியாக நடித்திருந்தனர். புதிதாக உருவாகவுள்ள "கொடி " படத்தின் 2-ஆம் பாகமா?  என்பது பற்றி தகவல் எதுவும் இல்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT