தினமணி கொண்டாட்டம்

துருக்கியில் நிகிஷா  

DIN

"என்னமோ ஏதோ', "கரையோரம்", "நாரதன்", "7 நாட்கள்", "பாஸ்கர் ஒரு ராஸ்கல்" படங்களில் கவர்ச்சி நடிப்பில் ஈர்த்தவர் நிகிஷா படேல்.  தமிழில் பெரிய வாய்ப்பு இல்லாத நிலையில் கடந்த ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் "பாண்டிமுனி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் இயக்குநருடன், நிகிஷா பங்கேற்றார். 

ஆனால் திடீரென்று அப்படத்திலிருந்து நிகிஷா நீக்கப்பட்டார்.  இயக்குநர் கஸ்தூரிராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்படத்திலிருந்து நிகிஷா நிராகரிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. புதிய படம் எதுவும் இல்லாமல் வாய்ப்புக்காகக்  காத்திருக்கும் நிகிஷா, இணையத்தில் அதற்கான வலை வீசி வருகிறார். மும்பை வீட்டில் பொழுதை கழித்துக்கொண்டிருந்த நிகிஷா திடீரென்று துருக்கி பறந்தார். கடற்கரை பகுதியிலும், நீச்சல் குளத்திலும் சிவப்பு நிற நீச்சல் உடையில்  நீந்தி மகிழ்ந்ததுடன் அப்படங்களை இன்ஸ்டாவிலும் பகிர்ந்து "என்னைப் பார் என் அழகைப்பார்' என்று கமெண்ட் பகிர்ந்திருக்கிறார். அதற்கு ஏகத்துக்கு ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். சினிமாவில் உங்களை மீண்டும் எப்போது பார்ப்பது என்று பலர் கேட்டிருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT