தினமணி கொண்டாட்டம்

வெப் சீரிஸ் தயாரிக்கும் ஏவி.எம்.

DIN


75 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள தயாரிப்பு நிறுவனம் ஏவி.எம். சினிமா, மெகா தொடர்கள் என தடம் பதித்த இந்த நிறுவனம் தற்போது வெப் சீரிஸிஸ் இறங்குகிறது. 

திரை உலகில் சமீப காலமாக நடக்கும் பட திருட்டு கும்பலை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த தொடருக்கு "தமிழ் ஸ்டாக்கர்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.  ஒரு படைப்பை சட்டவிரோதமாகவும், அங்கீகாரம் இல்லாமலும் நகல் எடுப்பது பெரும் குற்றம் மட்டுமின்றி, படைப்புத்திருட்டு என்பது, உலகெங்கும் உள்ள படைப்பாளர்களின் பெரும் கவலைகளில் ஒன்றாகும். 

இந்தியாவில், தமிழ்த் திரையுலகம், பல்வேறு ஆன்லைன் திருட்டு வலைத்தளங்களின் காரணமாக இந்த பிரச்னையுடன் முடிவில்லாத போரை நடத்தி வருகிறது. இந்தக் கதை அந்த திருட்டு உலகின் இருண்ட பக்கத்தை ஆழமாக சென்று காட்டுகிறது இந்த வெப் சீரிஸ்.  தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளிவர இருக்கிறது. "ஈரம்', "குற்றம் 23' படங்களை இயக்கிய அறிவழகன் இந்த வெப் சீரிûஸ எழுதி இயக்குகிறார்.

தயாரிப்பாளர் அருணா குகன்,  பேசும் போது... ""படைப்பு திருட்டுக்கு எதிரான தமிழ் திரைத்துறையின் இடைவிடாத போரின் கேள்விப்படாத அம்சங்களையும், அதை எதிர்கொள்வதற்கான வழிகள் பற்றி சொல்லியிருக்கிறோம்.  இதைக் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளோம், இந்த படைப்பு ஒரு தலைப்பு செய்திக்கு பொருத்தமான புதிரான கதை அம்சத்துடன் விளங்குகிறது. அறிவழகன் போன்ற தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குநருடன் இணைந்து வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம் '' என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT