தினமணி கொண்டாட்டம்

போலாமா ஊர்கோலம்

DIN

விக்னேஷ் சிவன், எச்.வினோத் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கி உள்ள படம் 'போலாமா ஊர்கோலம்'. இதில்  கதாநாயகனாக 'சுட்டுப் பிடிக்க உத்தரவு' , 'ஜகமே தந்திரம்', 'பேட்ட'  போன்ற  படங்களில் நடித்துள்ள பிரபுஜித் நடிக்கிறார்.

இவரே நண்பர்கள் உதவியில் கிரவுட் பண்டிங் முறையில் படத்தை தயாரித்துள்ளார். இதில் நாயகியாக நடித்துள்ள சக்தி மகேந்திரா, பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவர். முதன் முதலாக இதில் நாயகியாக நடித்துள்ளார். 


இவர்கள் தவிர ரவி ஏழுமலை, துளசி, சிவகார்த்திக், சூர்யா, கிருஷ்ணா, ரபிக், ஆதீ இராசன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

"இது வட சென்னையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. ஒரு மூத்த கால்பந்தாட்ட வீரர் தனது காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு பயணம் மேற்கொள்கிறார். அவர் தனது பயணத்தில் சந்திக்கும்  அதிர்ச்சியான, சுவையான, சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு தான்  இந்தப் படம்.

1980-களில் மாநில, தேசிய அளவில் பங்கெடுத்துப் புகழ்பெற்ற மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் படத்தில்  நடித் திருக்கிறார்கள். அவர்கள் இன்றும் விளையாடிக் கொண்டிருப்பவர்கள். அவர்களைச் சுற்றி இந்தக் கதை சுழல்கிறது. ஓய்வுபெற்ற கால்பந்தாட்ட வீரர்கள் இப்படத்தில் நடித்து இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது'' என்றார் இயக்குநர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT