தினமணி கொண்டாட்டம்

உலகின் புத்திசாலி!

சக்ரவர்த்தி

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நடாஷா பெரியநாயகம் உலகின் அதிபுத்திசாலி மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது பதிமூன்று. அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் ஃபிலோரன்ஸ் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கிறார்.

உலகின் அதிபுத்திசாலியைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் 76 நாடுகளிலிருந்து சுமார் 15,300 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில், நடாஷா உலக அதிபுத்திசாலி மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்படுவது இரண்டாவது முறையாகும். முதல்முறையாக 2021-இல் நடைபெற்ற போட்டியில் 84 நாடுகளிலிருந்து சுமார் 19 ,000 மாணவ மாணவிகள் பங்கேற்றபோதும், அவரே தேர்வு செய்யப்பட்டார்.

தனது வெற்றி நடாஷா கூறியதாவது:

""வீட்டில் என்னை பெற்றோரும் அக்காவும் உற்சாகப்படுத்தினர். புத்திசாலி மாணவியாக வந்துவிட வேண்டும் என்று அவர்கள் என் மேல் அழுத்தம் தரவில்லை.

என் போக்கில் செல்ல பெற்றோர் அனுமதித்ததே எனக்கு தரப்பட்ட மிகச் சிறந்த ஊக்கமும் உற்சாகமும் என்றே சொல்வேன். இந்தப் போட்டிக்காக பிரத்யேகமாக எந்தப் பயிற்சி வகுப்பிலும் சேரவில்லை. போட்டியின் கேள்விகளை எதிர்கொள்ள, பிரத்யேகமாக என்னைத் தயார் செய்வதில் அதிகமாகவும் கஷ்டப்படவில்லை. பள்ளிப் பாடங்களுடன் உபரியாக வாசித்தேன். முதல் முயற்சியில் தேர்வு செய்யப்பட்டதும் நான் மேற்கொண்ட முயற்சிகளும், பெற்ற அனுபவங்களும்தான்.

வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் எனில், வெற்றியோ, தோல்வியோ, முறையாக முயற்சி செய்ய வேண்டும். சாதாரணமாக முயற்சிக்கக் கூடாது. எதிர்காலத்தில் அறிவியல் அல்லது கட்டடக் கலையை படிக்க விருப்பம். கிடார், வயலின், பியானோ வாசிப்பேன். இசை கேட்பது எனக்குப் பிடிக்கும். ஓவியங்களும் வரைவேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT