இளைஞர்மணி

கடவுச்சொல் அல்ல... கடவு வாக்கியம்!

DIN

பள்ளிப்பாடங்களை நினைவில் வைத்துகொள்வது சிறுவர்களுக்கு எப்படி சவாலான விஷயமோ, அதைப்போல் வங்கி, செல்லிடப்பேசி, கணினி ஆகியவற்றின் கடவுச்சொற்களை (பாஸ்வேர்ட்) நினைவில் வைத்துக் கொள்வது இன்றைய காலங்களில் பெரியவர்களுக்கு சவாலாக உள்ளது.
 இது ஏதோ இந்தியர்களுக்கு மட்டும் உள்ள பிரச்னை என்று கருத வேண்டாம். உலகம் முழுவதும் கடவுச்சொற்களை நினைவு வைத்துக் கொள்வதற்கு படித்தவர்களே கஷ்டப்படுகின்றனர்.
 டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வந்தவுடன் இந்த கடவுச்சொற்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிட்டது. என்னதான் கைரேகை பதிவு, முகதோற்றம் பதிவு ஆகியவை வந்தாலும் கடவுச்சொற்களை நாம் நினைவில் வைத்தே ஆக வேண்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண "பாஸ்வேர்டை'ப்போல் "பாஸ்ஃபிரேஸ்' எனும் கடவுவாக்கியத்தை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடவுச்சொல்லை விட கடவுவாக்கியம் 24 சொற்களைக் கொண்டு நீளமாக இருந்தாலும், இதை எளிதில் நினைவில் வைத்து கொள்ளலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி கடவுச்சொல், கைரேகைப் பதிவு, முகதோற்றம் பதிவு ஆகியவற்றைவிட இது மிகவும் பாதுகாப்பானது என்றும் அவர்கள் உறுதியளிக்கின்றனர்.
 6 வார்த்தைகளுடன் கூடிய அந்த கடவு வாக்கியத்துக்கு ஏற்றவாறு ஒரு படத்தையும் பயனாளிகள் தமது நினைவுக்காக வரைந்து வைத்துக் கொள்ளலாம் என்றும் இதனால் அவர்கள் கடவுவாக்கியத்தை எந்தச் சூழ்நிலையிலும் மறக்கவே மாட்டார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 இதற்கான சோதனை ஆய்வையும் ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர். அதில், 50 இளைஞர்களை ஈடுபடுத்தி அவர்களுக்கு கடவு வாக்கியத்தை அளித்துள்ளனர். பின்னர் சில நாள்களுக்கு பிறகு அவர்கள் அந்த கடவு வாக்கியத்தை எழுதி வைக்காமல் நினைவுபடுத்தி சரியாகத் தெரிவித்தும் உள்ளனர். முதல்கட்டமாக இணையதள கடவுச்சொற்களுக்கு பதிலாக கடவுவாக்கியம் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
 - அ.சர்ஃப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT