இளைஞர்மணி

நிதித்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்!

உயர்ந்த கல்வியைப் படித்து பட்டங்கள் பலவற்றை கையில் வைத்திருந்தாலும், வேலைச்சந்தையில் முந்தியிருப்பதற்கு அது போதுமானதாக இருப்பதில்லை.

ந.முத்துமணி

உயர்ந்த கல்வியைப் படித்து பட்டங்கள் பலவற்றை கையில் வைத்திருந்தாலும், வேலைச்சந்தையில் முந்தியிருப்பதற்கு அது போதுமானதாக இருப்பதில்லை. துறைசார்ந்த புதியபுதிய மாற்றங்களை, முன்னேற்றங்களை உள்வாங்கிக் கொள்வதற்கு அவ்வப்போது பெரிய கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் சான்றிதழ் படிப்புகள் கைகொடுத்து வருகின்றன. இதற்கு நிதித்துறையும் விதி
விலக்கல்ல. 

நிதித்துறையில் வேலைசெய்துவருவோர் அல்லது புதிதாக நுழைய விரும்புவோர், தத்தமது திறமைகளைக் காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்வது அல்லது மேம்படுத்திக் கொள்வது வேலைச்சந்தையில் முந்தியிருக்க உதவும். மேலும் அந்த துறையில் உயர்ந்த பொறுப்புகளை அடைவதற்கும், வகிக்கும் பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்கும் சான்றிதழ் படிப்புகள் கைகொடுக்கும். அப்படிப்பட்ட, நிதித்துறை சார்ந்த படிப்புகளைக் காண்போம்:
சார்டர்டு அக்கவுண்டன்சி(சி.ஏ.): நிதிசார்ந்த வேலைகளில் உயர்ந்தது பட்டயக் கணக்காளர். அந்த பொறுப்பை அடைவதற்கு சார்டர்டு அக்கவுண்டன்சி (சி.ஏ.) படிப்புதான் அடிப்படை. ஆட்சிப் பொறுப்புக்கு வர விரும்புவோர் ஐஏஎஸ் படிப்பதுபோல, நிதித்துறையில் உயர்ந்த இடத்தைப் பிடிக்க சி.ஏ. படிப்பது வழக்கம். சி.ஏ. படிப்பை படிப்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால், முயன்றால் முடியாதது எதுவுமில்லை. அப்படியானால், சி.ஏ. படிப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி?

சி.ஏ. படிப்பின் முதல் படி, காமன் புரஃபிஷியன்ஸி டெஸ்ட்(சிபிடி) எழுதி, தேர்ச்சி பெறுவதுதான். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் இத்தேர்வை எழுதலாம். வணிகப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர்கள், பொதுத்தேர்வில் 55 சத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால், சி.பி.டி. தேர்வை எழுதுவதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அறிவியல், கலை பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர்கள், பொதுத்தேர்வில் 60சத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால், சி.பி.டி. தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதன்பிறகு சி.ஏ. தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால், பட்டயக்கணக்காளராகப் பணியாற்றலாம்.

வேலைவாய்ப்புகள்: கார்ப்பரேட் ஃபினான்ஸ், அக்கவுண்டிங், டேக்úஸஷன், ஃபினான்ஷியல் அனலிலிஸ் அல்லது ஆடிட்டிங் பணிகளில் கன்சல்டன்சியாகப் பணியாற்றலாம். முதலீட்டு வங்கிகளில் நிதியியல் திறனாய்வாளர், நிதிசொத்து மேலாண்மை நிறுவனங்களில் நிதி ஆலோசகர், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிதி மற்றும் கணக்கியல் ஆலோசராகப் பணியாற்றலாம்.

சார்டர்டு ஃபினான்ஷியல் அனாலிஸ்ட் (சி.எஃப்.ஏ.): அமெரிக்காவில் உள்ள சி.எஃப்.ஏ. இன்ஸ்டிடியூட் வழங்கும் மிகவும் புகழ்பெற்ற படிப்பு சார்டர்டு ஃபினான்ஷியல் அனாலிஸ்ட் (சி.எஃப்.ஏ.). இந்த படிப்பு மூன்று நிலைகளில் நிறைவுசெய்ய வேண்டியிருக்கும். மூன்று நிலைகளில் படிப்பை முடித்ததும் 48 மாதகால பணி அனுபவத்தைப் பெற வேண்டும்.அதன்பிறகு தான் சான்றிதழ் அளிக்கப்படுகிறது. 

வேலைவாய்ப்பு:

இந்த படிப்பை படித்தவர்கள் முதலீட்டு மேலாண்மை, சொத்து மேலாண்மை, நிறுவனங்களின் சொத்து மேலாண்மை, நிதிமேலாண்மை நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும். முதலீட்டு வங்கியியலிலும் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன.

காஸ்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்ட் 
(சி.எம்.ஏ.):ஒரு நிறுவனத்தின் பல்வேறுவகையான துறைகளின் நிதிசார்ந்த ஆவணங்களை திரட்டுவது காஸ்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்டின் முக்கியப்பணியாகும். ஒரு நிறுவனத்தின் நிதிசார்ந்த அனைத்து விவகாரங்களையும் திறமையோடு கையாள்வதுதான் இந்தபணியின் அடிப்படையாகும். சி.எம்.ஏ. சான்றிதழ் பெறுவதன் மூலம் இப்பணிகளைச் செய்து முடிப்பதற்கான அதிகாரம் கிடைக்கும். 

இப்படிப்புக்கான சான்றிதழைப் பெற ஃபவுண்டேஷன், இன்டர்மீடியட், ஃபைனல் எக்ஸாம் ஆகிய மூன்று நிலைத் தேர்வுகளை எழுத வேண்டியிருக்கும். இந்த தேர்வுகளுடன் 3 ஆண்டுகால நேரடிப் பயிற்சியைப்  பெற்றிருக்க வேண்டும். அதன் பிறகுதான் சான்றிதழ் வழங்குவார்கள்.

வேலைவாய்ப்பு: காஸ்ட் ஆடிட்டிங், டேக்úஸஷன், அஷ்யூரன்ஸ், ரிசோர்ஸ் பெர்ஃபாமன்ஸ் மேலாண்மைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.

ஃபினான்ஷியல் ரிஸ்க் மேனேஜர்கள் (எஃப்.ஆர்.எம்.): ஒரு நிறுவனத்தின் நிதிசார்ந்த முக்கியமான முடிவுகளை எடுக்கும் பொறுப்பு ஃபினான்ஷியல் ரிஸ்க் மேனேஜர்களிடம் (எஃப்.ஆர்.எம்.) இருக்கும். வட்டி ரிஸ்க், கடன் ரிஸ்க், லிக்யூடிட்டி ரிஸ்க், ஆபரேஷனல் ரிஸ்க் போன்ற பல்வேறு வகையான நிதிசார்ந்த ரிஸ்க்குகளைக் கையாளும் திறன் படைத்தவராக ஃபினான்ஷியல் ரிஸ்க் மேனேஜர்கள்(எஃப்.ஆர்.எம்.) இருப்பார்கள்.

ஃபினான்ஷியல் ரிஸ்க் மேனேஜர்கள்(எஃப்.ஆர்.எம்.) சான்றிதழ்கள் இரண்டு நிலைகளில் நடத்தப்படும் தேர்வுகளின் இறுதியில் அளிக்கப்படுகின்றன. இந்த படிப்பின் இறுதியில் குறைந்தபட்சம் 2 ஆண்டு கால நேரடி கட்டாயப்படுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு: வங்கிமற்றும் நிதி நிறுவனங்கள், அந்நிய செலாவணியைக் கையாளும் நிறுவனங்கள், நிதிச்சந்தைகளில் ஃபினான்ஷியல் ரிஸ்க் மேனேஜராக (எஃப்.ஆர்.எம்.) வேலைவாய்ப்பைப் பெறலாம். தனியாகவும் ரிஸ்க் அசெஸ்மென்ட் கன்சல்டன்ட்டாகவும் வேலை செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT