இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பரிதி இரா. வெங்கடேசன்


ரயில்லேண்ட்  டெவலப்மென்ட் அத்தாரிட்டியில் வேலை 


பணி:  அசிஸ்டன்ட் புராஜெக்ட் என்ஜினியர்  

காலியிடங்கள்: 45

சம்பளம்: மாதம் ரூ.35,000 - ரூ.54,600

வயது வரம்பு: 23.12.2021 தேதியின்படி 21 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: GATE தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 3  மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை  பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:www.rida.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து psecontract@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தின் மற்றொரு நகலை எதிர்காலப் பயன்பாட்டிற்காக கைவசம் வைத்துக் கொள்ளவும்.

மேலும் விவரங்கள் அறிய: https://rlda.indianrailways.gov.in/uploads/Vacancy_RLDA_Contract_02.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.12.2021


தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தை  மேம்பாட்டு சேவைகள் நிறுவனத்தில் வேலை


பணி: பைனான்சியல் மேனேஜ்மெண்ட் ஸ்பெஷலிஸ்ட்  

காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.60,000 வழங்கப்படும். 
வயது வரம்பு: 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிஏ,சிஎஸ், சிஎம்ஏ அல்லது எம்பிஏ(நிதியியல்) பாடப்பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் சேர்ச்சி பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  

பணி: அக்கவுண்டன்ட்

காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.
வயது வரம்பு: 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வணிகவியல், கணக்கியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது சிடபிள்யூஏ இன்டெர்/ சிஏ இன்டெர் ஆகிய படிப்புகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: புராஜெக்ட் அசோசியேட் 

சம்பளம்: மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.
வயது  வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணினி அறிவியல் அல்லது ஐடி பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: செக்ரட்டேரியல் அசிஸ்டன்ட்/ டேட்டா என்ட்ரி

காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை, முதுநிலை தட்டச்சு முடித்திருக்க வேண்டும். 

பணி: டிஸ்ட்ரிக்ட்  கோ-ஆர்டினேட்டர்ஸ்

காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்று கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ அல்லது ஐடி முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: டிஸ்ட்ரிக்ட் புராஜெக்ட் அசிஸ்டன்ட்ஸ்

காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.18,000 வழங்கப்படும்.
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்று கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ அல்லது மேலாண்மை, சமூக அறிவியல், ஊட்டச்சத்து பிரிவில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: பிளாக் கோ-ஆர்டினேட்டர்ஸ் 

காலியிடங்கள்: 28
சம்பளம்: மாதம் ரூ.20,000
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: பிளாக் புராஜெக்ட் அசிஸ்டன்ட்

காலியிடங்கள்: 52
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து அதனை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். 

முகவரி:  Director Cum Mission Director, Integrated Child Development Project Schemes, No.1, Pammal Nallthambi Street, M.G.R. Road, Taramani, Chennai - 113.

மேலும் விவரங்கள் அறிய: https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 24.12.2021

ரயில்வே துறையில்  வேலை


பணி:  கிளார்க் / டைப்பிஸ்ட் (ஸ்போர்ட்ஸ் கோட்டா) 
காலியிடங்கள்: 21

சம்பளம்: மாதம் ரூ. 5,200 -ரூ.20,200

வயது வரம்பு: 01.01.2022 தேதியின்படி 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விளையாட்டு தகுதி: அறிவிப்பில் வெளியிட் டுள்ள விளையாட்டுகளில் ஏதாவதொன்றில் சர்வதேசப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய போட்டிகள் போன்ற ஏதாவதொன்றில் பங்குபெற்று குறைந்தபட்சம் 3 ஆவது இடத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டு தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 01.04.2019 பின்னர் பெற்ற விளையாட்டுச் சாதனைகள் மட்டுமே கணக்கிடப்பட்டும். தற்போதும் சம்பந்தப்பட்ட விளையாட்டில்  ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.  

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மூலம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.rrcpryj.org/  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.12.2021



பாதுகாப்புத் துறையில்  வேலை

பணி: மெசென்ஜர் (எம்டிஎஸ்)  - 02
பணி:  வாட்ச்மேன் (எம்டிஎஸ்)  - 01
பணி:  சஃபைவாலா (எம்டிஎஸ்)   - 03
பணி: மெஸ் வெயிட்டர்- 01
பணி:  ரூம் ஆர்டர்லி  - 03
பணி: மசால்ஜி -  012

சம்பளம்: மாதம் ரூ.18,000 - ரூ.56,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.  அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகைககள் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.davp.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10601_26_2122b.pdf என்ற லிங்கைக் கிளிக் செய்து  தெரிந்துகொள்ளவும்.

முகவரி: The Commandant, Selection Centre South, Cubbon Road, Bangalore - 560 042.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 27.12.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT