இளைஞர்மணி

வேலை வேலை வேலை

பரிதி இரா. வெங்கடேசன்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை

பணியிடம்:  புதுக்கோட்டை மண்டலம்
மொத்த காலியிடங்கள்: 178

பணி: பருவகால பட்டியல் எழுத்தர்
காலியிடங்கள்: 34
கல்வித் தகுதி: இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

பணி: பருவகால உதவுபவர்
காலியிடங்கள்:100
கல்வித் தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: பருவகால காவலர்
காலியிடங்கள்: 44

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

லயது வரம்பு: மூன்றுவகையான பணிகளுக்கும் குறைந்தது 32 வயதில் இருந்து 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.  எஸ்சி, எஸ்டி, எஸ்சி(ஏ) பிரிவினர் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: புதுக்கோட்டை  மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட  தகுதியுடைய ஆண்கள் மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றுகளின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு  விண்ணப்பங்கள் சென்று சேர  வேண்டும்.

முகவரி: மண்டல மேலாளர்,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மண்டல அலுவலகம்,  கல்யாணராமபுரம் முதல் வீதி, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை-622002

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 11.11.2021.

----------------


பணியிடம்:  விழுப்புரம் மண்டலம்

மொத்த காலியிடங்கள்: 156
பணி: பருவகால பட்டியல் எழுத்தர்

காலியிடங்கள்: 78
சம்பளம்: மாதம் ரூ.2,410 மற்றும் அகவிலைப்படி
கல்வித் தகுதி: இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். 

பணி: பருவகால காவலர்

காலியிடங்கள்:78

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  

சம்பளம்: மாதம் ரூ.2,359மற்றும் அகவிலைப்படி

வயது வரம்பு: இரண்டு வகையான பணிகளுக்கும் குறைந்தது 18 வயதில் இருந்து 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.   

விண்ணப்பிக்கும் முறை: விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட தகுதியுடைய ஆண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றுகளுடன் கீழ்க்காணும் முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி:  மண்டல மேலாளர், மண்டல அலுவலகம்,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,  நெ.1, ஹாஸ்பிட்டல் ரோடு, விழுப்புரம் -605 602.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 15.11.2021.

மருத்துவத் துறையில் வேலை


நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்

பணி:  ஸ்கில்டு அசிஸ்டன்ட் கிரேடு  ஐஐ (எலக்ட்ரீசியன் கிரேடு -  II)   

சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.62,000

வயது வரம்பு: 01.07.2021 தேதியின்படி 18  வயது முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரீசியன், வயர்மேன் பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருப்பதுடன் தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: SC / SCA / ST / DAP(PH) /DW பிரிவினர் ரூ.250, மற்ற பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

மேலும் விவரங்கள் அறிய: http://www.mrb.tn.gov.in/pdf/2021/Electrician_Grade%20_II_Notification_29_10_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.11.2021

தஞ்சாவூர்  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை

பணி:  எமர்ஜென்ஜி பிரிவு செகரட்டரி

காலியிடம்: 01

தகுதி:   விபத்து மற்றும் முதலுதவிப் பிரிவு அல்லது  பிசிகல் அசிஸ்டன்ட் பிரிவில் இளங்கலைப் பட்டம்  பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,000

பணி:  டூருமா ரிஜிஸ்ட்ரி அசிஸ்டன்ட்ஸ்
காலியிடங்கள்: 02

தகுதி: கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.  நர்சிங் பிரிவில் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.10.000

பணி: ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னீசியன்
காலியிடங்கள்: 02

தகுதி: ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னீசியன் சான்றிதழ் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட  பல்கலைக்கழகம் அல்லது கல்விநிறுவனங்களில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ.15,000

விண்ணப்பிக்கும்முறை: ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிகமான இப்பணிகளுக்கு, தகுதி வாய்ந்த விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். 

முகவரி:  முதல்வர், அரசு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 15.11.2021.

தேசிய மாணவர் படை அலுவலகத்தில் வேலை

பணி: ஸ்டோர் அட்டென்டன்ட்    - 01

சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
பணி:  ஆபீஸ் அசிஸ்டன்ட்   - 02

சம்பளம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி:  செளகிதார்  - 03
சம்பளம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் மட்டுமே இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 18 வயது  முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி பிரிவினருக்கு தனித்தனியான வயது உச்சபட்ச விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. 

விண்ணப்பிக்கும் முறை: https://cms.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Commanding Officer, (TN) Girls Bn NCC, No.28, Dr.Alagappa Road, Sethu House Annexe, Purasaiwalkam, Chennai - 600 084

மேலும் விவரங்கள் அறிய: https://cms.tn.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 22.11.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரிப்பு

மகன் உயிரிழப்புக்கு காரணமான சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

மைலம்பாடியில் ரூ.61.40 லட்சத்துக்கு எள் விற்பனை

திருப்பூரில் ஆதரவற்ற முதியவா்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

உதகை, குன்னூரில் பலத்த மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

SCROLL FOR NEXT