மகளிர்மணி

அறிந்ததும் அறியாததும்!

DIN

* உலகின் மிகச் சிறிய அரசி, ஸ்காட்லாந்தை ஆண்ட "மேரி ஸ்காட்லாப்தின்' ஆவார். 1542-இல்  இவர் பதவியேற்றபோது அவரின் வயது, "பிறந்து ஆறு நாட்கள்!' மட்டுமே.
* உலகிலேயே அதிக ஆண்டு காலம் ஆட்சி செய்த அரசி, "விக்டோரியா மகாராணி'தான். இங்கிலாந்து நாட்டை தொடர்ந்து 64ஆண்டுகள் ஆண்டார்.
- கே.பிரபாவதி
* இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட முதல் பெண்மணி சரோஜினி நாயுடு.
* மத்திய இரயில்வே பட்ஜெட்டை தாக்கல்  செய்த முதல் பெண் அமைச்சர் மம்தா பானர்ஜி.
* அன்னி பெசன்ட் அம்மையார் பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
முதல் நாவலாசிரியை
சுவர்ணகுமாரி டெபி என்ற பெண் தன் 18-ஆவது வயதில் "டீப் நிர்மாண்' என்ற நாவலை 1874-ஆம் ஆண்டு வெளியிட்டார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் நாவலாசிரியை என்ற சிறப்பைப் பெற்றார். இவர் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத்  தாகூரின் மூத்த சகோதரி என்பது பலரும் அறியாதது.
- நெ.இராமன்.
பெண்களைத் தூக்கிலிட்ட சிறை!
பெண்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகிறது. மரண தண்டனை தருவதில்லை.
இதற்கு மாறாக, இந்திய விடுதலைக்குப் பின்னரும் பெண்களுக்கு மரண தண்டனை வழங்கித் தூக்கில் போடப்பட்டு உள்ளனர். 1956-ஆம் ஆண்டு ஒரே மாதத்தில் அடுத்தடுத்து மூன்று பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
வேலூர் சிறையில் தூக்கில் போட்டுக் கொல்லப்பட்ட பெண்கள் மங்கள லட்சுமி, ராணி, அங்காளம்மை. இதன் பிறகு இந்தியாவில் பெண்கள் யாரும் தூக்கிலிடப் படவில்லை.
 ("சிந்தனை ஓவியம்' என்னும் நூலிலிருந்து)
மலபார் மிளகு அன்பளிப்பு!
சாலமன் என்ற அரசன் ராணி ஷீபாவைக் காணச் செல்லும்போது, அவளுக்குக் கொண்டு சென்ற பல அன்பளிப்பு பொருள்களில் இந்தியாவின் மலபார் மிளகும் இடம் பெற்றிருந்ததாம். 
(காட்டில் சேகரித்தக் கருவூலம்' என்னும் நூலிலிருந்து)
- எல்.நஞ்சன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT