மகளிர்மணி

ஆண் வேடமிட்ட பெண்கள்

DIN

இந்தியா மறந்த விடுதலைப் போராட்ட வீராங்கனைகளுள் சரஸ்வதி ராஜாமணியும் ஒருவர். ரங்கூனில் பிறந்த இவர், நோதாஜியின் படைப் பிரிவில் ஒற்றராகப் பணிபுரிந்தார். பலமுறை ஆண் வேடமிட்டு ஆங்கிலேயரை ஏமாற்றியிருக்கிறார். தன் உயிரைப் பணயம் வைத்து பல முக்கிய தகவல்களைச் சேகரித்து நேதாஜிக்கு அளித்துள்ளார் சரஸ்வதி. இந்தியாவின் இளமையான ஒற்றவர் அவர்தான்! 16 வயதிலேயே இந்திய தேசியப் படையில் சேர்ந்துவிட்டார்.

அயர்லாந்தைச் சேர்ந்த மிராண்டா ஸ்டூ ஆர்ட் இவர் ஆண் வேடமிட்டு 1812-ஆம் ஆண்டு எடின்பர்க் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பெண்களுக்கு அப்போது கல்லூரியில் இடம் இல்லை. ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இருந்த பல நாடுகளில் டாக்டர் ஜேம்ஸ் பாரி என்ற பெயரில் மருத்துவச் சேவை புரிந்தார். 
தனது இறுதிக்காலம் வரை ஆணாகவே வாழ்ந்தார். இறந்த பிறகு அவர் உடலைச் சுத்தம் செய்த பெண்தான், அவர் ஆணல்ல, பெண்தான் என்று கண்டுபிடித்தார்.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர் ஆண் என்று குறிப்பிட்டு இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒன்றல்ல, இரண்டல்ல 56 ஆண்டுகள் ஆணாகவே வாழ்ந்துள்ளார். 
- வெ.பஞ்சாபகேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT