நொச்சியின் மருத்துவ குணங்கள்!
நொச்சியில் 32 வகைகள் உள்ளன. இதில் மூன்று வகை குறிப்பிடத்தக்கவை: அவை, வெண்நொச்சி, கரு நொச்சி, நீர் நொச்சி ஆகும்.
நொச்சியில் 32 வகைகள் உள்ளன. இதில் மூன்று வகை குறிப்பிடத்தக்கவை: அவை, வெண்நொச்சி, கரு நொச்சி, நீர் நொச்சி ஆகும். உயிர் காக்கும் மூன்று முக்கிய மூலிகையில் நொச்சியும் ஒன்றாகும் என்று சித்த வைத்திய நூல்கள் கூறுகின்றன.
கசப்பு, துவர்ப்பு மற்றும் காரச்சுவை கொண்ட நொச்சி 360 வகையான நோய்களை குணமாக்கும்
தன்மைக் கொண்டது.
நொச்சி இலைகளை சுடுநீரில் போட்டு குளித்தால் உடலில் உண்டாகும் வலி, தசைப்பிடிப்பு, கீல்வாதம், முக வாதம், உடல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும்.
நொச்சி இலையால் ஆவி பிடித்தால் சுவாசக் கோளாறுகள் நீங்கும். ஜலதோசம், மூக்கடைப்பு, சைனஸ், தலைவலி, இரைப்பு நோய், ஒற்றைத் தலைவலி, நீர்க்கோர்வை யாவும் நீங்கும்.
நொச்சி இலையை மிளகு, பூண்டு சேர்த்து மென்று தின்றால் ஆரம்பகால ஆஸ்துமா பிரச்னை சரியாகும்.
நொச்சி இலைச்சாறு மூட்டுவலியை குணப்படுத்தும். புண்களை ஆற்றும்.
உடலில் கட்டி, வீக்கம் இருப்பவர்கள் நொச்சி இலைகளை வதக்கி அந்த இடத்தில் கட்ட குணமாகும்.
மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதில் இதன் பங்கு அதிகம்.
நொச்சியின் வேருக்கு பாம்பின் விஷத்தை முறிக்கும் ஆற்றல் உண்டு.
கருநொச்சி இலைச்சாறு சீதபேதி உடல் பலவீனம், குடல் வலி, கணைய வீக்கம், பசியின்மை, குடல் பூச்சி, செரிமானப் பிரச்னை, நரம்பு வலி, மந்தமாகச் செயல்
படும் ஈரல் போன்றவற்றை சரி செய்கிறது.
கருநொச்சி தைலம் ஜுரம், வாய்குழறுதல், மார்புச்சளி, நீரிழிவு நோய், தலைபாரம், கண்டமாலை கை கால் கணுக்களின் வீக்கங்களுக்கு அருமருந்தாகிறது.