நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராம்பு! 
மகளிர்மணி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராம்பு!

இரவில் கிராம்பை உட்கொள்வது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை போன்ற வயிற்றுப் பிரச்னைகளைப் போக்க உதவும். இது உங்கள் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

சுந்தரி காந்தி

இரவில் கிராம்பை உட்கொள்வது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை போன்ற வயிற்றுப் பிரச்னைகளைப் போக்க உதவும். இது உங்கள் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

கிராம்பில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பது மட்டுமல்லாமல் இவை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளன. மேலும், இதில் முகப்பருவைத் தடுக்க உதவும் ஒரு வகை சாலிசிலேட் உள்ளது.

கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்வதன் மூலம் பல்வலியை தவிர்க்கலாம். அல்லது பல் வலியிருக்கும் இடத்தில் ஒரு கிராம்பை வைக்கலாம். இது வலி நிவாரணியாகவும் செயல்படும்.

தொண்டைப் புண் மற்றும் தொண்டை வலியைப் போக்க கிராம்பு உதவும்.

கை, கால்கள் நடுங்கும் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் படுக்கைக்கு செல்லும் முன் 1 முதல் 2 கிராம்புகளை உட்கொள்ளவதன் மூலம் பிரச்னையிலிருந்து நிவாரணம் பெறலாம்.

தினமும் கிராம்பை உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த கரோனா பெருந்தொற்று காலத்தில் நமக்கு மிகவும் அவசியமான ஒன்று.

இருமல், சளி, வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபட கிராம்பு உதவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நிமிஷங்களுக்கு ரூ. 60 லட்சம்! புர்ஜ் கலீஃபாவில் பிரதமர் பிறந்த நாள் வாழ்த்து! யார் செலவு?

"திருடர்களைப் பாதுகாக்கும் தலைமை தேர்தல் ஆணையர்!" Rahul Gandhi-யின் பரபரப்புக் குற்றச்சாட்டு!

பேரன்பே... ஃபெமினா!

மதராஸி வசூல் எவ்வளவு? படக்குழு அறிவிப்பு!

அதிவேக அரைசதம் விளாசிய நமீபிய வீரர்; ஜிம்பாப்வேவுக்கு 205 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT