மகளிர்மணி

கடலைப் பருப்பு மாங்காய் மிக்சர்

கடலைப் பருப்பை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

கடலைப் பருப்பு 250 கிராம்
மாங்காய் 1
பச்சை மிளகாய் 3
தேங்காய்த் துருவல் அரை கிண்ணம்
மஞ்சள் பொடி 2 தேக்கரண்டி
சர்க்கரை 3 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை: 

கடலைப் பருப்பை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் பருப்பை களைந்து எடுத்து அரை கிண்ணம் பருப்பை தனியாக வைத்து வைத்துகொண்டு மீதியுள்ள பருப்பை அரைப் பதமாக அரைத்துகொள்ள வேண்டும். மாங்காயைத் தோல் சீவி பச்சை மிளகாயையும் மாங்காயையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அரைத்த கடலைப் பருப்பை தனியாக எடுத்து வைத்த அரை கிண்ணம் கடலைப் பருப்பு, பொடியாக நறுக்கிய மாங்காய்,   பச்சை மிளகாய், கொத்தமல்லி,  தேங்காய்த் துருவல்,  மஞ்சள் பொடி, சர்க்கரை, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும். 

வாணலியில் எண்ணெய் விட்டு  காய்ந்தவுடன் கடுகு, கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை தாளித்து கலவையைச் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT