மகளிர்மணி

கோதுமை பக்கோடா

கோதுமை மாவையும், சமையல் சோடாவையும் நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். மோரில் உப்பு சேர்த்து கரைத்து, அதை கோதுமை மாவில் ஊற்றி கரைக்க வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

கோதுமை மாவு 200 கிராம்
மோர் 50 மில்லி
பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் 8
வெங்காயம் 3
இஞ்சி 1 துண்டு
சமையல் சோடா அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 பிடி
உப்பு, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை: 

கோதுமை மாவையும், சமையல் சோடாவையும் நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். மோரில் உப்பு சேர்த்து கரைத்து, அதை கோதுமை மாவில் ஊற்றி கரைக்க வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி, மாவில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு கெட்டியான பதத்தில் இருக்குமாறு பிசைய வேண்டும்.  வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை கொஞ்சம், கொஞ்சமாக உதிர்த்து போட்டு பொன்நிறமாக வெந்து எடுக்க வேண்டும். எண்ணெய் இருந்தால் வடித்துகொள்ள வேண்டும்.


ஆர்.ஜெயலட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT