மகளிர்மணி

வெள்ளைப் பிள்ளையார் கொழுக்கட்டை

அரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்து ரவை பதத்துக்கு உடைக்கவும்.  அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு  2 கிண்ணம் நீர்விட்டு ஒரு கொதிவிடவும்.

கவிதா சரவணன்

தேவையானவை: 

பச்சரிசி  ஒரு கிண்ணம்
பாசிப் பருப்பு  6  மேசைக்கரண்டி
தேங்காய்த் துருவல்  கால் கிண்ணம்
ஏலக்காய்த் தூள்  ஒரு தேக்கரண்டி
துருவிய வெல்லம்  ஒன்றரை கிண்ணம்
நெய்  2  மேசைக்கரண்டி

செய்முறை:  

அரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்து ரவை பதத்துக்கு உடைக்கவும்.  அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு  2 கிண்ணம் நீர்விட்டு ஒரு கொதிவிடவும். பின்னர், இறக்கி கல், மணல் போக வடிகட்டி மீண்டும் அடுப்பில் ஏற்றி தேங்காய்த் துருவல்,  ஏலக்காய்த் தூள் சேர்த்து உடைத்த ரவையைச் சேர்க்கவும்.

பாதி வெந்ததும் இறக்கி கைகளில் நெய் தொட்டுக் கொண்டு உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 8 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிகப்பு நிலவு... சாக்ஷி அகர்வால்!

பூவே... கீர்த்தி சுரேஷ்!

பரிசுத்தம்.... கல்யாணி!

இந்தியா மீது கணிசமாக வரி உயர்த்தப்படும் - டிரம்ப்

கனமழை எச்சரிக்கை: நீலகிரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT