மருத்துவம்
வாய்ப்புண் குணமாக, மணத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் போதும்.
நெஞ்சு சளி கரையை அத்திப்பழத்தை காலை, மாலை சாப்பிட்ட வேண்டும்.
இருமலுக்கு மிளகை வறுத்து தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
சளித் தொல்லை இருந்தால், கொதிக்கும் நீரில் மஞ்சள் தூளைப் போட்டு ஆவி பிடிக்கவும்.
வயிற்றுப்புண்ணைத் தடுக்க சூடான உணவு, குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
சமையல்
மாவு பிசையும்போது, கோதுமை மாவுடன் சிறிது நேரம் வறுத்த ரவையை சேர்த்து பிசைந்தால் பூரி மொறுமொறுவென்று இருக்கும்.
வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் சேர்த்தால், கமகமவென்று இருக்கும்.
குருமா செய்யும்போது, சிறிது இஞ்சியையும், ஓமத்தையும் சேர்த்தால் சுவை கூடும். எளிதில் ஜூரணமாகும்.
சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும்போது சிறிது ஓமப்பொடி சேர்த்தால் எளிதில் ஜீரணமாகும்.
ஆர்.கே.லிங்கேசன்
ஆன்மிகம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகேயுள்ள ஆத்மநாதர் கோயிலில் சிவன் குருநாதராகத் தோன்றி, மாணிக்கவாசகருக்கு உபதேசித்தார்.
மதுரை மாவட்டம் திருவாதவூர் மறைநாதசுவாமி கோயில் மாணிக்கவாசகர் அவதரித்த தலம்.
தேனி மாவட்டம் சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலில்ல சிவன், அம்பிகை பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் சிவன் மாணிக்கவாசகருக்கு ஆகமங்களை உபதேசித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மாணிக்கவாசகர் சொல்ல, சிவ பெருமான் திருவாசகத்தை எழுதிய தலமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.