நெல்லிக்காய் துவையல் 
மகளிர்மணி

நெல்லிக்காய் துவையல்

முதலில் இஞ்சி, நெல்லிக்காயை நறுக்கவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்து, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தேவையான பொருள்கள்:

பெரிய நெல்லிக்காய்-4

தேங்காய்த் துருவல்- கால் கிண்ணம்

இஞ்சி- சிறு துண்டு

கடுகு- 1 தேக்கரண்டி

உளுந்து- 2 மேசைக்கரண்டி

மிளகு- அரை தேக்கரண்டி

வர மிளகாய்-6

பெருங்காயத் தூள்- 1 சிட்டிகை

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

முதலில் இஞ்சி, நெல்லிக்காயை நறுக்கவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்து, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, நெல்லிக்காயைச் சேர்த்து வதக்கவும். இஞ்சி, நெல்லிக்காய் வதங்கியதும் அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.

வதக்கிய கலவை நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்தால், துவையல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிபாட்டுக்கு 500 விநாயகா் சிலைகள்

புதுவையில் திமுக மாடல் ஆட்சி அமையும்: தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நம்பிக்கை

பெங்களூா் நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி முடிவு

ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு விழா

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

SCROLL FOR NEXT