பஞ்ச தானிய சுண்டல் 
மகளிர்மணி

பஞ்ச தானிய சுண்டல்

மொச்சை, கொண்டைக் கடலையை ஆறு மணி நேரம் ஊறவைத்து, வேக வைக்கவும். காராமணி, பச்சைப் பயிறு, துவரை மூன்றையும் தனியே ஊறவைத்து, வாணலியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

வெள்ளை மொச்சை- 200 கிராம்

கருப்புக் கொண்டைக் கடலை, முழுத் துவரை, காராமணி, பச்சைப்பயிறு- தலா 100 கிராம்

வரமிளகாய்- 5

தேங்காய்த் துருவல்- 1 கரண்டி

கடுகு, உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

கறிவேப்பிலை- 1 ஆர்க்கு

செய்முறை:

மொச்சை, கொண்டைக் கடலையை ஆறு மணி நேரம் ஊறவைத்து, வேக வைக்கவும். காராமணி, பச்சைப் பயிறு, துவரை மூன்றையும் தனியே ஊறவைத்து, வாணலியில் வேக வைத்து எடுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து கிள்ளிய வரமிளகாயைப் போட்டு சிவந்ததும் தண்ணீர் வடித்துவைத்துள்ள பயிறு, கடலை, துவரையைச் சேர்த்து தேவையான உப்புடன் நன்றாகக் கிளறி தேங்காய்த் துருவலைச் சேர்த்து ஒரு கிளறு கிளரி கீழே இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: நாட்டு வெடிகுண்டு வீசி, இளைஞா் வெட்டிக் கொலை

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

திருவண்ணாமலை மாநகராட்சியில் தூய்மைப் பணி: அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்பு

ஆரணி, தேவிகாபுரத்தில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

வேன் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

SCROLL FOR NEXT