உப்பலடை
அரிசி, பருப்பு, மிளகாய் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து தண்ணீரில் போட்டு மூன்று மணிநேரம் ஊறவைத்தவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
மரகதம்
தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி - ஒரு கிண்ணம்
Advertisement
Advertisement
துவரம் பருப்பு - அரை கிண்ணம்
சிவப்பு மிளகாய் -4
தேங்காய் - ஒரு மூடி துருவியது
பெருங்காயப் பொடி -
அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொறிக்க
கருவேப்பிலை, கொத்துமல்லி - தலா ஒரு கைப்பிடி
செய்முறை:
அரிசி, பருப்பு, மிளகாய் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து தண்ணீரில் போட்டு மூன்று மணிநேரம் ஊறவைத்தவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
அத்துடன் உப்பு, பெருங்காயப்பொடி துருவிவைத்த தேங்காயைப்போட்டு ஒரு சுற்று சுற்றி அத்துடன் கருவேப்பிலை, கொத்துமல்லி தழைகளை கிள்ளிச் சேர்த்து கலந்து இட்லி மாவு பதத்தில் கரைக்கவும்.
பின்னர், அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் குழிக்கரண்டியால் ஒவ்வொரு அடையாக ஊற்றி எடுக்கவேண்டும். இது நன்றாக உப்பி மொறு மொறு என்றிருக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.