மகளிர்மணி

பேராயராகும் முதல் பெண்மணி...

உலகில் எட்டரை கோடி மக்கள் சார்ந்துள்ள இங்கிலாந்து தேவாலய அமைப்பின் முக்கியத்துவம் பெற்ற 'கேன்டர்பரி' தேவாலயத்தின் புதிய பேராயராக ஸாரா முல்லல்லி, அக்டோபர் 3-இல் அறிவிக்கப்பட்டார்.

தினமணி செய்திச் சேவை

உலகில் எட்டரை கோடி மக்கள் சார்ந்துள்ள இங்கிலாந்து தேவாலய அமைப்பின் முக்கியத்துவம் பெற்ற 'கேன்டர்பரி' தேவாலயத்தின் புதிய பேராயராக ஸாரா முல்லல்லி, அக்டோபர் 3-இல் அறிவிக்கப்பட்டார். இருந்தாலும், அவர் பதவியேற்பது 2026 ஜனவரியில்தான்.

திருச்சபையின் 1,400 ஆண்டு வரலாற்றில் இதுவரை 105 பேராயர்கள் பொறுப்பில் இருந்தாலும், அவர்கள் அனைவரும் ஆண்கள். முன்னாள் தலைமை செவிலியரான ஸாரா முல்லல்லி, திருச்சபையின் உயர்பொறுப்புக்கு 106-ஆவது பேராயராகி உள்ளார்.

ஸாராவுக்கு அறுபத்து மூன்று வயதாகிறது. மருத்துவராகக் கல்வித் தகுதியும் திறமையும் இருந்தாலும் செவிலியராகப் பணியாற்றவே விரும்பினார். அந்தத் துறையில் மேல்படிப்புகளை முடித்து பதவி உயர்வுடன் பல மருத்துவமனைகளில் பணிபுரிந்து, 2000-இல் இறைபணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

ஸாரா திருமணமானவர். ஒரு மகன், ஒரு மகள். கணவர் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”எல்லா கட்சிக்காரர்களும், ’தவெகவுக்குத்தான் ஓட்டு’ என்கிறார்கள்” செங்கோட்டையன் Speech | TVK

வெகுவிமர்சையாக நடைபெற்ற நவசபரி ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம்!

விஜய்யைப் பார்த்ததும் ஆர்ப்பரித்த தொண்டர்கள்! காதை மூடி சிரித்த விஜய்! | TVK

மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசன் சிலைகள் திறப்பு

தமிழக காவல்துறையைச் சேர்ந்த 3 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT