மகளிர்மணி

மோதிசூர் லட்டு

முதலில் ஒரு பவுலில் கடலை மாவுடன் தண்ணீர் சேர்த்துக் கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் ஆரஞ்சு கலர் கேசரி பவுடரை சேர்த்து நன்றாக கலக்கவும்.

செளமியா சுப்ரமணியன்

தேவையான பொருள்கள்:

கடலை மாவு - 125 கிராம்

ஆரஞ்சு கலர் கேசரி பவுடர் - 1/4 மேசைக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

வெள்ளைச் சர்க்கரை - 250கிராம்

நெய் - 2 தேக்கரண்டி

ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி

முந்திரிப் பருப்பு - 10

செய்முறை:

முதலில் ஒரு பவுலில் கடலை மாவுடன் தண்ணீர் சேர்த்துக் கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் ஆரஞ்சு கலர் கேசரி பவுடரை சேர்த்து நன்றாக கலக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி, சிறிய துளையுள்ள கரண்டியை பயன்படுத்தி மாவு கரைசலை பூந்தியாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சி, மிதமான தீயில் பாகுவை வைத்து அதில் பூந்தி, நெய், முந்திரிப் பருப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். மிதமான சூட்டில் லட்டு பிடித்துப் பரிமாறவும். சுவையான மோத்திசூர் லட்டு தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

வாய்க்கால் நீரில் மூழ்கி பொறியாளா் மாயம்

இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயம்: இந்தியா - கனடா முடிவு!

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம்!

கயையில் குடியரசுத் தலைவா் முன்னோா் வழிபாடு!

SCROLL FOR NEXT