மகளிர்மணி

சுவையான சுண்டல் செய்ய...

கடலைப் பருப்பை வேகவைத்து நீரை வடிகட்டி வெல்லப் பொடி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி சேர்த்தால் இனிப்பு சுண்டல் தயாராகிவிடும்.

ஆர். ஜெயலட்சுமி

 கடலைப் பருப்பை வேகவைத்து நீரை வடிகட்டி வெல்லப் பொடி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி சேர்த்தால் இனிப்பு சுண்டல் தயாராகிவிடும்.

சுண்டலில் கேரட் துருவல், பீட்ரூட் துருவல் சேர்த்தால் நிறம் அழகாக இருப்பதோடு சத்து கூடுதலாக கிடைக்கும்.

எந்தப் பயிறு வகைகளைப் பயன்படுத்தி சுண்டல் செய்தாலும் எட்டு மணி நேரம் ஊற வைத்து, வேக விட்டால் நன்றாக வெந்து சாப்பிடும்படி மென்மையாக இருக்கும்.

சுண்டலில் தேங்காய்த் துருவலை சற்று வறுத்து போட்டால் ஊசி போகாமல் இருக்கும்.

பாசிப் பருப்பு சுண்டலுக்கு பாசிப் பருப்பு குழையாமல் முத்து முத்தாக இருக்க, இரண்டு மணி நேரம் ஊறவைத்து பாசிப்பருப்பை வறுத்து கொதிக்கும் நீரில் போட்டு மூடி வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து தண்ணீரை வடித்தால் சுண்டல் தயாராகிவிடும். பின்னர், தாளித்துக் கொட்டினால் போதும்.

 சுண்டல் மீந்துவிட்டால் சிறிது வெங்காயம், தக்காளிப் பழங்களை வதக்கி, மசாலா தூள் சேர்த்து சுண்டலையும் கலந்து கொதிக்க வைத்து, கொத்தமல்லி தழை தூவி இறக்கி டிபனுக்கு தொட்டுக் கொள்ளலாம்.

பட்டாணி சுண்டலை வேக வைத்து இறக்கும்போது, கடுகு, கருவேப்பிலையுடன் சிறிது மிளகுப்பொடி தூவி இறக்கினால் வித்தியாசமான சுவையாக இருக்கும்.

கொழுக்கட்டை சுண்டல் செய்ய கொழுக்கட்டை மாவில் பூரணத்துக்குப் பதில் ஒரு தேக்கரண்டி சுண்டலை வைத்து, மூடி ஆவியில் வைத்து எடுக்க வேண்டும். சுவையாக இருக்கும்.

உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், பெருங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை வறுத்து சிறிது உப்பைச் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து வைத்துகொள்ள வேண்டும். பட்டாணி கொண்டைக்கடலை சுண்டல் செய்யும்போது, வேகவைத்து கடுகு தாளித்ததும் தேவையான அளவு தயார் செய்த பொடியையும் மேலே தூவ வேண்டும். காரம், உப்பு ஒன்றாகக் கலந்து சுண்டல் ருசியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

வாய்க்கால் நீரில் மூழ்கி பொறியாளா் மாயம்

இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயம்: இந்தியா - கனடா முடிவு!

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம்!

கயையில் குடியரசுத் தலைவா் முன்னோா் வழிபாடு!

SCROLL FOR NEXT