முகப்பு
மகளிர்மணி

சமையல் குறிப்புகள்...

பருப்புகளை லேசாகச் சூடுபடுத்தி எவர்சில்வர் டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள் வராது. நீண்ட நாள்கள் கெடாமலும் இருக்கும்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 4:05 AM
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 10:10 PM

பருப்புகளை லேசாகச் சூடுபடுத்தி எவர்சில்வர் டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள் வராது. நீண்ட நாள்கள் கெடாமலும் இருக்கும்.

பருப்பு டப்பாக்களில் வெள்ளைப் பூண்டு, சுக்குத் துண்டு போட்டு வைத்தால் பூச்சி, புழுகள் நெருங்காது.

கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழைகளை வாழைப் பட்டையில் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்.

Advertisement

இறைச்சி வேக வைக்கும்போது சிறிது பாக்கு சேர்த்துவிட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.

சமையல் எண்ணெய்யில் ஒரு துண்டு வெல்லம் போட்டால் எண்ணெய் பொங்காது.

இட்லிப் பொடி அரைக்கும்போது சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

நீராகாரத்தில் வெங்காயம் அல்லது கேரட் ஒன்றை நறுக்கிப் போட்டு நார்த்தங்காய் வற்றலுடன் 2 டம்ளர் பருகினால் உடல் குளிர்ச்சியாகும்.

வடை மாவில், வடை தட்டும் போது உள்ளே ஒருபனீர் துண்டை வைத்து மூடி பொரித்தால் வடை சுவை கூடும். -நாகஜோதி கிருஷ்ணன், சென்னை.

கோதுமை மாவுடன் சிறிது சாதம் வடித்த கஞ்சியைச் சேர்த்துப் பிசைந்து போட்டால், பூரி மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

முற்றின தேங்காயைப் பல்லு பல்லாக நறுக்கி, நெய்யில் சிவக்க வறுத்துப் பாயசத்தில் போட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

உருளைக்கிழங்கு போண்டா செய்வதுபோல் அனைத்துக் காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி, உருட்டி கடலைமாவில் தோய்த்து பொரித்து எடுத்தால் சுவை மிகுந்த வெஜிடபிள் போண்டா தயார்.

புடலங்காயின் விதைகளை எடுத்து வதக்கி, உளுந்தம் பருப்பு, மிளகாய் சேர்த்து வறுத்து புளி, உப்பு சேர்த்து துவையலாக அரைத்தால் சுவையாக இருக்கும்.

பனீரை சிறு துண்டுகளாக்கி, தோசைக்கல்லில் போட்டு, இரண்டு பக்கமும் சிவக்கும்படி வறுத்து எடுத்து பட்டாணி குருமாவில் சேர்த்தால் அதிக சுவை கிடைக்கும்.

மோர்க்குழம்பு செய்ய தேவையான அளவு புளித்த மோர் இல்லையென்றால், புளிப்பான மூன்று தக்காளிகளை, மோர்க்குழம்புக்குத் தேவையான பொருள்களுடன் சேர்த்து அரைத்தால் புளிப்புச் சுவை வந்துவிடும். -ஆர். கீதா, கொச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.