FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வத்தக்குழம்பு சுவை அதிகரிக்க...

இரண்டு மணிநேரம் இட்லிகளை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு எடுத்து, சிறிது நேரத்துக்குப்பின் உப்புமா செய்தால் கட்டியில்லாமல் உதிர் உதிராக இருக்கும்.

2 மே 2026, 10:03 pm IST
பகிர்:

இரண்டு மணிநேரம் இட்லிகளை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு எடுத்து, சிறிது நேரத்துக்குப்பின் உப்புமா செய்தால் கட்டியில்லாமல் உதிர் உதிராக இருக்கும்.

சாம்பாருக்கு புளியின் அளவைக் குறைத்து, தக்காளியைச் சேர்த்து கொதிக்க விட்டால் சாம்பாரின் சுவை அதிகரிக்கும்.

தயிர்ப் பச்சடி, சாலட் போன்றவற்றுக்குத் தேங்காய் எண்ணெயில் கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்துப் பாருங்கள். அவை நல்ல வாசனையுடன் இருக்கும்.

Advertisement

Advertisement

வத்தக்குழம்பு செய்யும்போது இரண்டு தேக்கரண்டி கடலைப்பருப்பை வறுத்து, பொடி செய்து குழம்பில் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்.

பச்சை வேர்க்கடலைக் குழம்பு செய்யும்போது வேர்க்கடலையை ஊறவைத்து சேர்த்தால் சீக்கிரம் வெந்து விடும்.

வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால் உதிர் உதிராகி விடும். பிறகு பொரியல் செய்வது சுலபம். பொடியாக நறுக்கும் நேரமும் மிச்சம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments