வீட்டுக் குறிப்புகள்...
ஜவ்வரிசியை சாதம் போல் வேக வைத்து, மோரில் கரைத்து உப்புப் போட்டு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றுவலியும் இருக்காது.
ஜவ்வரிசியை சாதம் போல் வேக வைத்து, மோரில் கரைத்து உப்புப் போட்டு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றுவலியும் இருக்காது.
தேங்காய்ச் சாதம் செய்யும்போது, அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்துப் பொடி செய்து கலந்தால், சாதம் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
அரிசியையும், பருப்பையும் கலந்து வாசனை வரும் வரை வறுத்துக் களைந்துவிட்டு வெண்பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கல் செய்தால் விரைவில் வெந்துவிடும். மணமும் தூக்கலாக இருக்கும்.
Advertisement
Advertisement
-அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
பச்சைப்பயறு ஊட்டச்சத்து மிக்க உணவாகும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தொடர்ந்து பச்சைப் பயறை உணவில் சேர்த்தால், ஊட்டச்சத்துகளைப் பெறமுடியும்.
பயத்தமாவுடன் உளுந்து மாவைச் சேர்த்து, தலைமுடியை அலசினால் பொடுகு பிரச்னைகளும் தீரும். முடியும் நன்கு வளரும்.
பயத்தம் பருப்பை வேக வைத்து உண்பது நோயாளிகளுக்கும், வலுவற்றவர்களுக்கும் நல்லது.
பாலையும் பழங்களையும் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. நெய், தேன் இரண்டையும் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. மருந்து உள்கொள்ளும்போது, அகத்திக்கீரையைச் சாப்பிடக் கூடாது.
வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி தயிர், வெல்லம் கலந்து சாப்பிட்டு வர தொண்டை வலி நீங்கும். வெங்காயச்சாற்றை நீராகாரத்துடன் சேர்த்துக் குடித்தால், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயச் சாற்றை மோருடன் கலக்கிக் குடித்து வர இருமல் குணமாகும்.
-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.