முகப்பு
விளையாட்டு

இந்தியாவின் மின்னல் வேக மனிதர்! தேசிய சாதனையை முறியடித்த குரிந்தர்வீர் சிங்!

தேசிய சாதனையை முறியடித்த இந்தியாவின் மின்னல் வேக மனிதரான குரிந்தர்வீர் சிங்கைப் பற்றி...

குரிந்தர்வீர் சிங்.
பகிர்:

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அதிவேகமாக இலக்கை எட்டி இந்தியாவில் இந்தியாவின் மின்னல் வேக மனிதராக தேசிய சாதனையை முறியடித்துள்ளார் குரிந்தர்வீர் சிங்.

பெடரேஷன் கோப்பைக்கான 29வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவரான குரிந்தர்வீர் சிங், தேசிய அளவில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெறும் 10.09 வினாடிகளில் இலக்கைக் கடந்து தேசிய சாதனையை முறியடித்துள்ள குரிந்தர்வீர் புதிய சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

Advertisement

Advertisement

இதன்மூலம், மிகக்குறைந்த விநாடிகளில் 100 மீட்டர் இலக்கை அடைந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் 10.20 வினாடிகளில் இலக்கை எட்டிய அனிமேஷ் குஜூர் இரண்டாவது இடத்தையும், பிரணவ் பிரமோத் 10.29 வினாடிகளில் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் நடைபெற்ற அரையிறுதிச் சுற்றுகளிலேயே குர்விந்தர் சிங்கும் அனிமேஷ் குஜூரும் அடுத்ததடுத்து சாதனை ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

அரையிறுதிச் சுற்றில், குர்விந்தர் 10.17 வினாடிகளில் இலக்கை எட்டி, கடந்தாண்டு குஜூர் படைத்த சாதனையை முறியடித்தார். ஆனால், அடுத்த அரையிறுதிச் சுற்றில் குஜூர் 10.15 வினாடிகளில் இலக்கை எட்டி தனது தனிப்பட்ட சிறந்த சாதனையுடன் சாதனையை மீண்டும் தக்கவைத்துக் கொண்டார்.

யார் இந்த குரிந்தர்வீர் சிங்?

25 வயதான குரிந்தர்வீர் சிங், பஞ்சாபில் உள்ள பாட்டியாலாவைச் சேர்ந்த ஒரு விவசாயியின் மகன். இவருக்கு 13 வயதாக இருந்தபோது, ​​ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் ஈடுபட்டுள்ளது.

100 மீட்டர் ஓட்டத்தைக் கைவிட்டுவிட்டு அதற்குப் பதிலாக 400 மீட்டர் ஓட்டத்திற்கு மாறுமாறு பல பயிற்சியாளர்கள் தனக்கு அறிவுரை வழங்கியதாகவும் குரிந்தர்வீர் சிங் நினைவு கூர்ந்தார்.

குரிந்தர்வீர் சிங், தற்போது பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹில்லியரிடம் பயிற்சி பெற்று வருகிறார். ஆனால், அவரது தொடக்கால பயிற்சியாளரான சரப்ஜித் சிங்கும், குர்விந்தர் சிங்கின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

குர்விந்தர் சிங் இன்றும் அவரிடம் தொடர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். முன்னதாக, 2025 ஆம் ஆண்டு இந்திய கிராண்ட் பிரிக்ஸில் 100 மீட்டர் ஓட்டத்தில் 10.20 வினாடிகளில் கடந்து குர்விந்தர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

summary

Indian sprinting witnessed history in Ranchi as Gurindervir Singh shattered the men's 100m national record twice in two days. The Punjab sprinter became the first Indian ever to breach the 10.10-second barrier during a sensational Federation Cup showdown with Animesh Kujur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.