கேரளம்: சாதம் வெந்துகொண்டிருந்த குக்கரில் கஞ்சாவை மறைத்த நபர் கைது
கேரளத்தில் போலீஸுக்குப் பயந்து சாதம் வெந்துகொண்டிருந்த குக்கரில் கஞ்சாவை மறைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளத்தில் போலீஸுக்குப் பயந்து சாதம் வெந்துகொண்டிருந்த குக்கரில் கஞ்சாவை மறைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் குன்னங்குளம் பகுதியில் வசிப்பவர் பினீஷ் (40). இவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குன்னங்குளம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் அங்கு சோதனையிட சென்றனர்.
போலீஸ் தனது வீட்டுக்கு வருவதை கவனித்த பினீஷ், கஞ்சா இருந்த பிளாஸ்டிக் பாக்கெட்டை அடுப்பில் சாதம் வெந்து கொண்டிருந்த குக்கருக்குள் போட்டு மூடியுள்ளார். வீடு முழுவதும் சோதனை செய்த போலீசாரால் எந்தவொரு போதைப்பொருளையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில் குக்கர் தொடர்ந்து விசில் அடித்தபோது, அதிலிருந்து கஞ்சா வாசனை வருவதை அதிகாரிகள் கவனித்தனர். உடனே போலீஸார் அடுப்பில் இருந்து குக்கரை இறக்கி, அதிலிருந்த ஆவியை வெளியேற்றிவிட்டு, அதனைச் சோதனையிட்டனர்.
அப்போது வெந்த சோற்றுக்குள் 401 கிராம் கஞ்சா அடங்கிய பாக்கெட் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து அவரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள பினீஷ் ஏற்கெனவே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் என்றும், அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
A man allegedly tried to hide ganja inside a pressure cooker in which rice was being cooked after police arrived at his house during a narcotics operation at Kunnamkulam here on Saturday, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.