முகப்பு
மகளிர்மணி

புழுங்கல் அரிசி தேங்காய் அடை

புழுங்கல் அரிசியை சூடான வெந்நீர் விட்டு மூடி வைக்க வேண்டும்.

Updated On : 10 மே 2026, 12:00 am IST
புழுங்கல் அரிசி தேங்காய் அடை
பகிர்:

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி -200 கிராம்

சிறிய தேங்காய் -ஒன்று

Advertisement

Advertisement

புளி -எலுமிச்சம்பழ அளவு

மிளகாய் வத்தல் -10

பெருங்காயப் பொடி, சீரகம், கடுகு - தலா ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை -ஒரு ஆர்க்கு

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

கடலைப்பருப்பு -இரண்டு தேக்கரண்டி

செய்முறை:

புழுங்கல் அரிசியை சூடான வெந்நீர் விட்டு மூடி வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து நன்றாகக் களைந்து அதனுடன் துருவிய தேங்காய், புளி, உப்பு, மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயப் பொடி முதலியன போட்டு கெட்டியாக அரைத்து, மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை வாழை இலையில் எண்ணெய் தடவிக் கொண்டு தோசை போல் கையில் நன்றாகத் தட்டி, தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இந்த அடைகளைப் போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும். அடை செய்வதற்கு முன்னால் இரண்டு தேக்கரண்டி கடலைப்பருப்பையும், ஒரு தேக்கரண்டி கடுகையும் ஒரு கரண்டியில் போட்டு எண்ணெய் ஊற்றி தாளித்து மாவில் கொட்டி, பிறகு மாவை பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments