கோதுமை மாவு அப்பம்
வெல்லத்தை பாகு வைத்து வடிகட்டி, அதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, தேங்காய், ஏலப்பொடி நன்றாகக் கரைக்கவும்.
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு -2 கிண்ணம்
தேங்காய் -1 மூடி
Advertisement
Advertisement
அரிசி மாவு -அரை கிண்ணம்
வெல்லம், நெய் -தலா ஒன்றரை கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி -சிறிதளவு
செய்முறை :
வெல்லத்தை பாகு வைத்து வடிகட்டி, அதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, தேங்காய், ஏலப்பொடி நன்றாகக் கரைக்கவும். குழிப்பணியாரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி , கலந்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றி நிரப்பி, இருபுறமும் திருப்பிவிட்டு பொன்னிறமாக எடுக்கவும். சுவையான கோதுமை அப்பம் தயார்.