FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சீனிப் போளி

மைதா மாவுடன் அல்லது கோதுமை மாவுடன் உப்பு இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து மூடி வைக்க வேண்டும்.

19 செப்டம்பர் 2026, 10:37 pm IST
சீனிப் போளி
பகிர்:

தேவையானவை:

சர்க்கரை, மைதா மாவு அல்லது கோதுமை மாவு -தலா 200 கிராம்

தேங்காய் -2

Advertisement

Advertisement

முந்திரிப் பருப்பு, திராட்சை,

ஏலக்காய்- தலா 5

ரவை -இரண்டு மேசைக் கரண்டி

நெய், உப்பு -சிறிதளவு

செய்முறை:

மைதா மாவுடன் அல்லது கோதுமை மாவுடன் உப்பு இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து மூடி வைக்க வேண்டும். முந்திரிப் பருப்புகளையும் உலந்த திராட்சையையும் பொடியாக நறுக்கி, வாணலியில் போட்டு, நெய் ஊற்றி அடுப்பில் வைத்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். ஏலக்காயைப் பொடி செய்யவும்.

தேங்காயைத் துருவிக் கொள்ளவும். ரவையில் தண்ணீர் விட்டு கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தேங்காய்த் துருவல், ஊறின ரவை ஆகிய இரண்டையும் கிரைண்டரில் போட்டு நைசாக அரைக்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து தேவையான தண்ணீர் விட்டு சர்க்கரையை போட்டு, அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளற வேண்டும். பூரணம் கையில் ஒட்டாமல் உருட்ட வரும் பக்குவத்தில் ஏலக்காய்த் தூள், முந்திரிப்

பருப்பு, திராட்சையைப் போட்டு கலந்து கீழே இறக்கி ஆறியதும் சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். மைதா மாவு அல்லது கோதுமை மாவை உருண்டையாக உருட்டி சப்பாத்திக் கல்லில் வைத்து வட்டமாக தட்டி, அதன் நடுவில் பூரண உருண்டையை வைத்து, மறுபடியும் தேய்த்து மூட வேண்டும். எண்ணெய் தடவப்பட்ட வாழை இலையில் இந்த உருண்டையை வைத்து பூரணம் வெளியே வந்துவிடாமல் கவனமாக மெல்லிய போளிகளாகத் தட்டி எடுக்க வேண்டும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் தட்டிய போளிகளைப் போட்டு வாழையிலையை எடுத்து விட்டு அதன் மேல் சிறிதளவு நெய்விட்டு முறுகலானவுடன் போளியை பொன்னிறத்தில் எடுக்க வேண்டும்.

ஆர். ஜெயலெட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments