சென்னையில் 1,500 விநாயகர் சிலைகள், 18,000 போலீஸார் பாதுகாப்பு
தமிழகம் முழுவதும் 1 லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுவது குறித்து...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாளை (செப். 14) தமிழகம் முழுவதும் 1 லட்சம் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படவுள்ளது.
மாநிலம் முழுவதும் நாளை (செப். 14) விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் இந்து அமைப்புகள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கத்தினரும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
இதன்படி, நாளை கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் சென்னையில் 1,562 விநாயகர் சிலைகள் வழிபாடு நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், விழாவின்போது 16,500 காவலர்கள், 1,500 ஊர்க்காவல் படை வீரர்கள் என மொத்தம் 18,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
Advertisement
Advertisement
மேலும், சென்னை, புறநகர்ப் பகுதிகளில் 3,000 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, வழிபாடு நடத்தப்படவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வழிபாட்டுக்காக 1 லட்சம் விநாயகர் சிலைகள் நிறுவப்படவுள்ளன.
இதனிடையே, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் விநாயகர் சிலைகள் மற்றும் விழாவில் கலந்துகொள்வோருக்கும் காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
விநாயகர் சிலைகள் நிறுவப்படும் இடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பிறகே விழாவை நடத்துபவர்கள் சிலைகளை நிறுவ வேண்டும். தீயணைப்புத் துறை, மின் வாரியம் ஆகியவற்றிடமிருந்து தடையில்லாச் சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.
விநாயகர் சிலைகள், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பொருள்களால் செய்திருக்கப்படக் கூடாது. நிறுவப்படும் விநாயகர் சிலையின் உயரம், அதன் அடித்தளத்திலிருது 10 அடிக்குமேல் இருக்கக் கூடாது.
விநாயகர் சிலைகளை, பிற வழிபாட்டுத் தலங்களோ மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் நிறுவப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
மதவாத வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலோ பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கு எவ்விதத்திலும் இடம்தரக் கூடாது.
விநாயகர் சிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 24 மணிநேரமும் சுழற்சி முறையில் 2 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட வேண்டும். விழா நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்தில் அரசியல் கட்சிகளுக்கோ மதரீதியான தலைவர்களுக்கோ ஆதரளிக்கும் விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது.
விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வலப் பாதைகள், சிலை கரைப்பிடங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.
மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சென்னை மெட்ரோ சேவையில் நாளை அட்டவணை மாற்றம் செய்யப்பட்டு, ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைபடி இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
1,500 Vinayagar idols in Chennai; 18,000 police personnel deployed for security
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.