1,500 ஆண்டுகள் பழமையான திருவலஞ்சுழி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்
திருவலஞ்சுழி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது பற்றி....
1,500 ஆண்டுகள் பழமையான திருவலஞ்சுழி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே திருவழிச்சுழியில் கபர்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் அப்பர் மற்றும் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற சிறப்பு மிக்க தலமாகும். இவ்வாலயத்தில், விநாயகருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.
விநாயகர் சன்னதி அமைந்துள்ள பகுதி முழுவதும் கருங்கற்களால் செய்யப்பட்ட நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன், புராதன கட்டடக் கலையின் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. தொன்மையும், ஆன்மிகப் பெருமையும் கொண்ட இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு, வாணி மற்றும் கமலாம்பிகை எனும் இரு மனைவியருடன் விநாயகப் பெருமான் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முன்னதாக, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளங்கள் இசைக்க, கோயில் கொடிமரத்தில் விழாக் கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கோயில் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.
The Vinayagar Chaturthi festival at the 1,500-year-old Thiruvalanchuli Temple began in a grand manner with the hoisting of the flag.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.