FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விநாயகர் சதுர்த்தி: ஆப்கன் - இந்தியா டி20 தொடருக்கான அட்டவணையில் மாற்றம்?

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான தேதிகளில் திடீர் மாற்றம் செய்யப்படுவதைப் பற்றி...

விநாயகர் சதுர்த்தி.
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான தேதிகளில் திடீர் மாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே போன்ற சிறிய கிரிக்கெட் அணிகளின் முன்னேற்றத்துக்காக அவர்களின் சொந்த மண்ணிலேயே கிரிக்கெட் தொடரை ஏற்பாடு செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

சமீபத்தில் ஜிம்பாப்வேவுக்குச் சென்று அங்கு ஹராரேயில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாட இந்தியா திட்டமிட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஆப்கன் கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகள் அனைத்தும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக துபை போன்ற பொதுவான கிரிக்கெட் திடல்களிலேயே நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், ஆப்கானிஸ்தான் - இந்தியா மோதும் போட்டிகள் இந்தியாவிலேயே நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் போட்டியை நடத்தும் நாடாகவும், இந்திய அணி வெளிநாட்டு அணியாகவும் களமிறங்குகிறது.

இவ்விரு அணிகளும் மோதும் 3 போட்டிகளுக்கான தேதிகளை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த ஆக. 12 ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, வருகிற செப். 13 ஆம் தேதி முதல் போட்டியும், செப். 15 இரண்டாவது போட்டியும், செப். 17 ஆம் தேதி 3-வது போட்டியும் தில்லி அருண் ஜேட்லி திடலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், போட்டிக்கான தேதிகளை மாற்றுவது குறித்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. போட்டிகளுக்கான தேதிகளை மாற்றுவது குறித்து இன்னும் அதிகாரபூர்வ முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால், ஆப்கன் கிரிக்கெட் வாரியத்திற்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

வருகிற செப். 14 ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்கள் இருப்பதால், இந்தியாவில் நடைபெறும் கலாசார விழாக்களைக் கருத்தில் கொண்டு, போட்டிகளை செப். 11, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளுக்கு மாற்றுமாறு பிசிசிஐ-க்கு ஒரு கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

The Afghanistan Cricket Board (ACB) has approached the BCCI with a request to move one of the three T20Is against India in Sept to Sept 14, coinciding with Ganesh Chaturthi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments