விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது ஏன்?
விநாயகர் சதுர்த்தி ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறும் தாத்பரியமும் பற்றி தெரிந்துகொள்வோம்..
இந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி விழா. தடைகளை நீக்கி, ஞானம், செல்வம், வெற்றி ஆகியவற்றை அருளும் விநாயகப் பெருமானின் பிறந்த நாளாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.
முழுமுதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த வருடம் வருகின்றன (செப்டம்பர் 14) திங்கள் கிழமையன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. அப்படிப்பட்ட இந்த தருணத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஏன் கொண்டாடுகிறோம்? அதன் தாத்பரியம் என்ன? வரலாறு பற்றியும் தெரிந்துகொள்வோம்.
மன்னர் சத்ரபதி சிவாஜியின் காலத்திலேயே விநாயகர் சதுர்த்தி விழா பிரபலமாகிவிட்டாலும் இன்று நாம் பார்க்கும் விநாயகர் விழாக் கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவரான பாலகங்காதர திலகர்.
Advertisement
Advertisement
1893-ம் ஆண்டு "சர்வஜன கனேஷ் உத்சவ்" என்ற பெயரில் இவர் ஆரம்பித்துவைத்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களே இன்று வரை மக்கள் மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
புராணப்படி அரக்கர்களின் கொடுமையிலிருந்து தங்களைக் காத்திடத் தவமிருந்து, சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டதன் பயனாகத் தடைகளைத் தகர்த்தெறியும் ஆற்றலுடன் சிவன் பார்வதியால் உருவாக்கப்பட்டவர்தான் விநாயகப் பெருமான்.
இவர் ஒரு ஆவணி மாத சதுர்த்தியன்று யானை முகத்தோடும், மனித உடலோடும் அரக்கன் கஜமுகாசுரனை அழித்து தேவர்களை மீட்டார். எனவே, அன்று முதல் இந்த தினத்தை விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட, மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் கூடுதல் உற்சாகத்துடன் 10 நாள்கள் விநாயகர் சதுர்த்தி விழாக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்தியா மட்டுமின்றி நேபாளம், அமெரிக்கா, மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
Vinayagar Chaturthi is one of the major festivals celebrated with great enthusiasm by Hindus.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.