விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தின் முதல் விநாயகர் சிலை பிரதிஷ்டை!
தமிழகத்தின் முதல் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது தொடர்பாக..
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் முதல் விநாயகர் சிலை கும்பகோணத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் மிகக் கோலாகலமாகவும் கொண்டாடப்படும் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா, வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதனையொட்டி, மாநிலம் முழுவதும் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த ஆண்டுக்கான தமிழகத்தின் முதல் விநாயகர் சிலையை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தொடங்கி வைத்தார்.
Advertisement
Advertisement
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பாலக்கரை பகுதியில் 10 அடி உயரமுள்ள "விவசாயம் காக்கும் விநாயகர்" மற்றும் "ராஜ கம்பீர விநாயகர்" ஆகிய இரண்டு விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்குச் சிறப்புத் தீபாராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்குக் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டன/
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.