சிறுவர்மணி

சிறுவர் பாடல்: அணில் பிள்ளை!

அங்கே ஓடுதுஅணில் பிள்ளைஅதற்கு கொஞ்சமும்பொறுப்பில்லை! இங்கே கனிகள்மரங்களிலேஇனிப்பாய் கனிந்ததைமறந்தனவே! திங்காதிருந்தால்ருசியில்லை -அதுதின்பதைப் பார்த்தால்பசியில்லை!

வெ.தமி​ழ​ழ​கன்

அங்கே ஓடுது
அணில் பிள்ளை
அதற்கு கொஞ்சமும்
பொறுப்பில்லை!

இங்கே கனிகள்
மரங்களிலே
இனிப்பாய் கனிந்ததை
மறந்தனவே!

திங்காதிருந்தால்
ருசியில்லை -அது
தின்பதைப் பார்த்தால்
பசியில்லை!

எங்கே ஓடுது
அணில் பிள்ளை
ஏனோ அதற்கு
பொறுப்பில்லை!

குண்டு மணிகளோ
அதன் கண்கள்
குஞ்சம் போலவே
அதன் வாலாம்!

கண்டு மகிழ்ந்திட
அணில் பிள்ளை
கிடைக்கும் சுகம்
அளவில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாா்வதீஸ்வரா் கோயில் நில மோசடி வழக்கு: ஆளுநரிடம் இந்து முன்னணி புகாா்

மா கவாத்து தொழில்நுட்பப் பயிற்சி

ஆக்கூா் கோயில் கும்பாபிஷேகம்

‘கல்லூரிகளை மாணவா்கள் பாா்வையிடும் களப்பயணம் தொடக்கம்’

சுற்றுச்சூழல் போட்டி பரிசளிப்பு

SCROLL FOR NEXT