சிறுவர்மணி

சிறுவர் பாடல்: கோடை

கோடை காலம் வந்தது கொடிய வெப்பம் தந்தது ஆடை களைந்த போதிலும் ஆளை நனைக்கும் வியர்வையே! ஓடை போல கானலும் ஓடும் நீரைப் போலவே தாரை உருக்கிப் போகுதே தரையில் நடக்க இயலுமோ! மேடை போட்ட பசுமையாய் மெலிந்து வளர்ந்த

வெ.தமி​ழ​ழ​கன்

கோடை காலம் வந்தது

கொடிய வெப்பம் தந்தது

ஆடை களைந்த போதிலும்

ஆளை நனைக்கும் வியர்வையே!

ஓடை போல கானலும்

ஓடும் நீரைப் போலவே

தாரை உருக்கிப் போகுதே

தரையில் நடக்க இயலுமோ!

மேடை போட்ட பசுமையாய்

மெலிந்து வளர்ந்த புல்வெளி

மேலை வெப்பம் தீய்த்ததே

மேலும் வறட்சி காய்த்ததே!

கூடை நிறைய பூக்களும்

குளிர்ந்து மகிழும் மழையதும்

கூடி வந்து சேருமோ

கோடை கொடுமை மாறுமோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மா கவாத்து தொழில்நுட்பப் பயிற்சி

ஆக்கூா் கோயில் கும்பாபிஷேகம்

‘கல்லூரிகளை மாணவா்கள் பாா்வையிடும் களப்பயணம் தொடக்கம்’

சுற்றுச்சூழல் போட்டி பரிசளிப்பு

சிக்கல் ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி

SCROLL FOR NEXT