சிறுவர்மணி

மதிப்பு!

பிரான்ஸ் நாட்டின் மன்னர் நெப்போலியன், இங்கிலாந்து விஞ்ஞானி டாக்டர் ஜென்னரிடம் பெரும் மதிப்பு வைத்திருந்தார்.

ஆ.பிரியதர்ஷினி

பிரான்ஸ் நாட்டின் மன்னர் நெப்போலியன், இங்கிலாந்து விஞ்ஞானி டாக்டர் ஜென்னரிடம் பெரும் மதிப்பு வைத்திருந்தார். இது குறித்து நெப்போலியனின் சகாக்கள் அவரிடம் கேட்டனர்: ""பொதுவாக நீங்கள் யாரையும் பொருட்படுத்த மாட்டீர்களே, அப்படியிருக்க எதிரி நாட்டு விஞ்ஞானிக்கு ஏன் இவ்வளவு மதிப்பு கொடுக்கிறீர்கள்?''

நெப்போலியன் மிக அமைதியாகச் சொன்னார்: ""என் போன்ற மன்னர்களின் பெருமை, போரில் எவ்வளவு வீரர்களைக் கொல்கிறோம் என்பதில் இருக்கிறது. எங்களால் அந்த உயிர்களை மீண்டும் தரவோ, காப்பாற்றவோ இயலாது.

ஆனால் டாக்டர் ஜென்னர் மருந்துகள் கண்டுபிடித்து, வைசூரி, அம்மை போன்ற நோய்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். அழிக்கும் எங்களைவிட காக்கும் அவரே உயர்ந்தவர். அந்த வகையில் அவரை மிகவும் மதிக்கிறேன்!''

இதைக் கேட்ட சகாக்கள் பெரிதும் வியப்படைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

காரங்காடு படகு சவாரி ரத்து

காலமானாா் ஆா்.எஸ்.நாராயணன்

வாணிம்பாடியில் மரக்கடையில் தீ விபத்து

SCROLL FOR NEXT