சிறுவர்மணி

தங்க முட்டை!

பொன்னப்பன் சந்தையிலிருந்து ஒரு கோழி வாங்கி வந்தான். அந்தக் கோழியானது தினம்தினம் ஒரு வெள்ளி முட்டையை இட்டு வந்தது! 

முக்கிமலை நஞ்சன்

பொன்னப்பன் சந்தையிலிருந்து ஒரு கோழி வாங்கி வந்தான். அந்தக் கோழியானது தினம்தினம் ஒரு வெள்ளி முட்டையை இட்டு வந்தது! 
பொன்னப்பன் கோழி இடுகின்ற வெள்ளி முட்டைகளை பார்க்கின்ற நேரத்தில் எல்லாம் மிகவும் கவலையடைந்தான். 
""இந்தக் கோழியானது வெள்ளி முட்டைக்குப் பதிலாக தங்க முட்டையை இட்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்!....இந்தக் கோழி பொன்முட்டையை இடாதா? என்று ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். 
பொன்னப்பனின் மனநிலையை அவன் மனைவி புரிந்துகொண்டாள். அவள் பொன்னப்பனைப் பார்த்து ""நமக்கு இந்தக் கோழி கிடைத்ததே மிகவும் அதிர்ஷ்டமாகும்!....இந்தக் கோழி வெள்ளி முட்டை இடுகின்றதே என்று ஏங்குகின்றீர்களே!.....இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடையுங்கள்! ஒரு வேளை இந்த வெள்ளி முட்டை கூட கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டாள். 
உடனே பொன்னப்பன் வெறுப்புடன் கோழியைப் பார்த்தான். ""இந்த வெள்ளி முட்டை கிடைக்காமல்
போகட்டும்!...அதனைப் பற்றி எனக்குக் கவலையில்லை! ஆனால் எனக்கு தங்க முட்டைக் கிடைத்தால்தான் நான் திருப்தியடைவேன்'' என்றான். 
பொன்னப்பன் இவ்வாறு பேசுவதைக் கோழி கேட்டது. மறுநாள் முதல் அது சாதாரண முட்டை இட்டது! கிடைத்து வந்த வெள்ளி முட்டையினையும் பேராசையால் இழந்து விட்டோமே என்று பொன்னப்பன் மேலும் கவலைப்பட்டான். 

நீதி: பேராசையானது இருப்பதையும் இழக்க வைத்துவிடும்.
(பயன் தரும் பண்பு நெறிக்கதைகள் என்னும் நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT