சிறுவர்மணி

தபால் மாமா !

DIN

மிதி வண்டியில் ஏறிக்கொண்டு
மிதித்து மிதித்து ஓட்டிக்கொண்டு
தபால் மாமா வருகிறார்!}நம்
தபால் எல்லாம் தருகிறார்!

கடிதக் கட்டு கையிலே
வெயில் தொப்பி தலையிலே
காக்கிச் சீர் உடையிலே
ஊர் நெடுகில் செல்கிறார்

தகவல் எல்லாம் சொல்கிறார்!
அக்கா அனுப்பும் பணவிடை
சந்தா கட்டிய பத்திரிகை}ஆயுள்
காப்பீட்டு நினைவறிக்கை

எல்லாம் கொண்டு வருகிறார்!
உரிய நாளில் தருகிறார்!
இணைந்து நாம் இருந்திட
இடங்கள் பல சுற்றிடும்

இடையறாது உழைத்திடும்
தபால் மாமா வருகிறார்!}நம்
தபால் எல்லாம் தருகிறார்!}நம்
தபால் எல்லாம் தருகிறார்!
- க.சங்கர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT