சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

DIN

கேள்வி:
தேனீக்கள் கொட்டுவதால் உயிரினங்கள் இறந்து போகும் என்று சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். இது உண்மையா?
இதில் எள்ளளவும் உண்மை கிடையாது... இப்படித்தான் நம் நாட்டில் பலர் பலவிதமான வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். எதையும் தீர ஆராய்ந்து முடிவுக்கு வரக் கற்றுக்கொள்ளுங்கள்.
தேனீ கொட்டி, பாதிக்கப்பட்ட விலங்குகளுக்குச் சிகிச்சை அளிப்பதை, கால்நடை மருத்துவமனைகளில் பார்த்திருக்கிறேன். விலங்குகளின் கண் இமைகள் காது மடல்கள், உதடுகள், கழுத்து போன்ற இடங்களில் வீக்கம் இருக்கும். 
மருத்துவர்கள் வீங்கிய பகுதிகளில் பதிந்திருக்கும் தேனீயின் கொடுக்குகளை மிகவும் பொறுமையாக அகற்றுவார்கள். பின்னர் அதற்கான வலி நிவாரணி மருந்தைக் கொடுப்பார்கள். கடிபட்ட சுவடே தெரியாமல் வீக்கங்கள் மறைந்தே போகும். 
அதற்காக அசட்டுத் தைரியத்துடன் தேன் கூட்டில் கை வைத்துவிட்டு அவதிப்படாதீர்கள்... அதற்கு நான் பொறுப்பல்ல...
-ரொசிட்டா

அடுத்த வாரக் கேள்வி
கண்கொத்திப் பாம்பு சரியாக கண்களைப் பார்த்துக் கொத்துமாமே? அப்படி ஒரு பாம்பு இருக்கிறதா?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் 
நல்ல பதில் கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திண்டுக்கல் மாவட்டத்தில் மே தின பேரணி

காரைக்குடி - பெங்களூா் இண்டா்சிட்டி விரைவு ரயில் இயக்கவேண்டும்

கமுதி, மாரியூா் மானாமதுரை கோயில்களில் குரு பெயா்ச்சி பூஜை

தமிழ் தேசியக் கட்சி மாநிலச் செயலரை தாக்கியவா் கைது

கடல் வழியாக இலங்கைக்குச் செல்ல முயன்ற தம்பதி உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT