எங்கள் வீட்டு மாட்டிற் கின்று
இனிக்கும் விருந்துப் பொங்கல்
இணைந்த உழைப்பின் உயர்வைச் சொல்லி
இசையும் நன்றிப் பொங்கல்!
சொந்தமெல்லாம் ஒன்று சேர்ந்து
சொல்லும் அன்புப் பொங்கல்!
சொந்தம் கொண்ட மாட்டைப் போற்றி
சொல்ல வந்த பொங்கல்!
அன்புத் தம்பி அண்ணன் அக்கா
அன்னை தந்தையோடு
அணிந்து கொள்ளப் புதிய உடையில்
அழகு சேர்த்த பொங்கல்!
உயிர்கள் வாழ உணவைப் பெருக்க
உழவர் போற்றும் பொங்கல்!
பயிர்கள் ஓங்கப் பார்த்துப் பார்த்து
விளைந்த கதிரின் பொங்கல்!
உலகமெல்லாம் புரிந்து போற்றி
உயர்த்துகின்ற பொங்கல்!
உண்மை, அன்பு உழைப்பிற்கெல்லாம்
உறுதி காட்டும் பொங்கல்!
உயர்ந்து வானில் இருந்து நமக்கு
உதவும் ஒளியைப் பார்த்து
உயர்த்திக் கரங்கள் ஒன்று சேர்த்து
வணங்க வந்த பொங்கல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.