சிறுவர்மணி

பொன்மொழிகள்

மனிதன் தன் வயிற்றைப் பிராணிகளின் பிரேதக் குழியாக்குவது நல்லதன்று.

DIN


மனிதன் தன் வயிற்றைப் பிராணிகளின் பிரேதக் குழியாக்குவது நல்லதன்று.  
- அக்பர்

அறிவு வளர, வளர உணர்ச்சிகள் பண்பட்டு நுட்பம் அடைகின்றன.  
-  மு . வரதராசனார்

அன்பின் மூலமாகவே ஆனந்தத்தைப் பெருக்க முடியும்.  
-  சத்ய சாயி

பூக்கள் வண்ணங்களோடு மணம் பரப்பவும், பறவைகள் சுதந்திரத்தோடு சங்கீதம் பாடவும், மனிதன், உயிர்களை நேசித்து அன்பு செலுத்தவும் படைக்கப்பட்டுள்ளான். இவைகளால் உலகில் பிரகாசமும், மணமும், சாந்தியும் ஏற்படுகின்றன. 
- ஜீன்மாரி வியன்னே

ஆன்மாவின் வலிமையை சோதித்துப் பார்க்கவே பிறவிகள் ஏற்படுகின்றன. 
- பிரெளனிங்

உறுதியான நம்பிக்கைக்கு இறைவன் துணையிருப்பார். இயற்கையின் எல்லா சக்திகளும் நமக்குத் துணையாயிருக்கும்!  
- ஜேம்ல் ஆலென்

இறைவன் பஞ்சைக்  கொடுப்பார். நாம்தான் அதைத் துணியாக நெய்ய வேண்டும்.  
-  எபிகுரூஸ்

செய்த தவற்றை மறைப்பது இரண்டு முறை தவறு செய்வதற்கு ஒப்பாகும்.
-  தாமஸ் புல்லர்

செலவுக்கு மேல் கூடுதலாக வருவாயுள்ளவன் செல்வந்தன். வரவுக்கு மேல் செலவு செய்பவன் ஏழை. அவ்வளவுதான். 
- புருவெர்

அறியாமையிலிருந்து அச்சமும் தோன்றுகிறது. 
- எமர்சன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழைக்கு வாய்ப்பு!

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஆவணி பிரம்மோத்ஸவம்: பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: 12 பேருக்கு உடனடி நல உதவி

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT