FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வனங்களைக் காப்போம்

மாணவத் தம்பி தங்கைகளேமாசறு தங்கக் கம்பிகளேதேனினும் இனிய செய்திகளைசெவிகளைத் தந்தே கேளுங்கள்

28 ஜனவரி 2024, 11:04 am IST
பகிர்:

மாணவத் தம்பி தங்கைகளே
மாசறு தங்கக் கம்பிகளே
தேனினும் இனிய செய்திகளை
செவிகளைத் தந்தே கேளுங்கள்

கானகம் பறவைகள் விலங்குகளும்
கருத்தாய் இயற்கையைப் பேணிடுமே
ஆன மட்டும் அவையெல்லாம்
அடுத்தவைக் காகவும் வாழ்ந்திடுமே

நாட்டில் மூன்றில் ஒரு பங்கு
நல்ல வனங்களாய் இருக்கணுமே
காட்டு உயிர்கள் வனங்காக்கும்
கட்டுப் பாட்டுடன் தான்வாழும்

Advertisement

Advertisement

பழங்களைத் தின்றே கொட்டைகளை
பறவைகள் விதைத்தே வனம்பெருக்கும்
பழம்காய் விதைகள் கட்டைகளை
பலருக்கும் தரும் மரம் உதவிசெய்யும்

தா...  வரங்கள் என்றாலே
தருமே வரங்கள் தாவரங்கள்
கானக மரங்கள் வாழ்வெல்லாம்
கனிவாய் மனிதர்க் குதவிடுமே

மனிதர்கள் இல்லை என்றாலும்
வனங்கள் தாவரம் இவைவாழும்
இனியநல் பறவைகள் விலங்குகளும்
இயற்கையில் இணைந்தே வாழ்ந்திடுமே

வனங்கள் இல்லா விட்டாலும்
விலங்குகள் பறவைகள் இலைஎனினும்
மனிதர்கள் வாழ்ந்திட முடியாதே
மனதில் சிந்தித்தே செயல்படுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments