சிறுவர்மணி

ஒன்றாய் உண்ணும் பொங்கல்!

ஒன்றாய் உழைக்கும் மாட்டுக்கு    ஒருநாள் விருந்து வைத்திடுவோம்நன்றாய் நம்மோ டுழைத்திடுதே

நம்பிக்கை நாகராஜன்

ஒன்றாய் உழைக்கும் மாட்டுக்கு
    ஒருநாள் விருந்து வைத்திடுவோம்
நன்றாய் நம்மோ டுழைத்திடுதே
    நாளும் பாடு பட்டிடுதே
பெற்ற குழந்தை உதவுதல்போல
    பிரியங் காட்டி நமைத்தாங்கும்
கற்றோர் காட்டும் பாசாங்கு
    காட்டு வதில்லை எள்ளளவும்
அன்பில் சேர்ந்த ஒருபிள்ளை
    ஆதர வான நற்பிள்ளை
என்பும் உருக உழைப்பதிலே
    எங்கள் மாடே முதற்பிள்ளை
எங்கள் வீட்டுப் பிள்ளையென
    இசைந்தே வாழும் இயல்பினிலே
தங்கும் இடத்தில் தண்மையுடன்
    தானாய் இருக்கும் அமைதியிலே
உழைக்கும் உயிர்க்கு விருந்திடவே
    ஓர்ந்தார் நன்றி தமிழர்களே
அழைப்போம் மாட்டை அழகுடனே
    அருமை விருந்தைப் படைப்பதற்கே
நன்றிக் கதிரோன் பொங்கலிது
    நலிவை மாற்றும் பொங்கலிது
ஒன்றும் உறவும் அஃறிணையும்
    ஒன்றாய் உண்ணும் பொங்கலிது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20: தெ.ஆ. அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது நமீபியா..!

தீபாவளி வருகிறது! 70% சலுகையில் பட்டாசு என்ற விளம்பர மோசடி!

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

SCROLL FOR NEXT