சிறுவர்மணி

புகழை அள்ளணும்

சு.பொன்னியின் செல்வன்

நல்ல பிள்னை என்ற பெயரை
    நாளும் வாங்கணும்; - நீ
நாளுக்குநாள் நன்றாய்க் கற்று
    அறிஞனாகணும்!

தூய்மையிலே உடல் உடையைத்
     துலக்கி வைக்கணும்; - நீ
தொண்டுசெய்து மற்றவர்க்குத்
    துணையிருக்கணும்!

அன்பு பற்றுப் பாசத்திலே 
    ஆளாய் வளரணும்;-நீ
நீதி நேர்மை நியாயமெல்லாம்
    நிலைக்க உழைக்கணும்!

பெரியோர்க்கு மரியாதை
    கொடுத்து வணங்கணும்; - நீ
பெற்றோரே தெய்வமென்றுத் 
    தினமும் வணங்கணும்!

உயர்ந்தவரை, படித்தவரை
    நட்பு கொள்ளணும்; - நீ
ஊரை ஏய்க்கும் மனிதரிடம்
    ஒதுங்கி வாழணும்!

ஊருக்கெல்லாம் எடுத்துக் காட்டும்
    வகையில் வாழணும்; - நீ
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
    புகழை அள்ளணும்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT